இனி எங்க ஆட்டம்., எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்ட டைம் ஓவர்- டுவிட்டர் நிறுவனம் அதிரடி!

|

டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது உறுதி செய்யப்பட்டது. போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்து முறையாக டுவிட்டர் நிறுவனம் அறிவிக்கப்படவில்லை என மஸ்க் குறிப்பிட்டு இந்த ஒப்பந்தம் நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்தார். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் வாங்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கான கால அவகாசம் சட்டப்படி முடிந்து விட்டது என டுவிட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கால அவகாசம் சட்டப்படி முடிந்துவிட்டது

கால அவகாசம் சட்டப்படி முடிந்துவிட்டது

டுவிட்டர் தளத்தில் உள்ள போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்து முறையாக அறிவிக்கும் வரை டுவிட்டர் தளத்தை வாங்கப் போவதில்லை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் சட்டப்படி முடிந்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் இனி ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என்றால் பங்குதாரர்களின் ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என டுவிட்டர் தெரிவித்திருக்கிறது.

ஒழுங்குமுறை நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்

ஒழுங்குமுறை நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்

மீண்டும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் பங்குதாரர்களின் ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து பொருந்தக் கூடிய ஒழுங்குமுறை நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என டுவிட்டர் தெரிவித்துள்ளது. எச்எஸ்ஆர் சட்டத்தின்படி, எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கான காலம் முடிந்துவிட்டதாக டிவிட்டர் இன்க் தெரிவித்துள்ளது. இனி டுவிட்டரை எலான் மஸ்க் வாங்குவாரா, டுவிட்டரை வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்தால் அதற்கு டுவிட்டர் இயக்குனர் குழு எடுக்கும் ஒப்பந்தம் என்னவாக இருக்கும் என்ற பல கேள்விகள் இருக்கிறது.

முறையான ஆவணங்கள் தேவை: எலான் மஸ்க்

முறையான ஆவணங்கள் தேவை: எலான் மஸ்க்

டுவிட்டரில் 5 சதவீதம் மட்டுமே ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான முறையான ஆவணங்களை மஸ்க் கேட்டு மஸ்க் வலியுறுத்தி இருந்தார். டுவிட்டர் தளத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவான ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருப்பதாக டுவிட்டர் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் தற்போது வரை முறையாக சமர்பிக்கப்படவில்லை. குறைந்த விலையில் ஒப்பந்தம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. ஒருவர் குறிப்பிடுவதை விட மோசமான ஒன்றுக்கு நீங்கள் அதே விலையை கொடுத்து வாங்க முடியாது என மஸ்க் கேள்வி எழுப்பி இருந்தார்.

44 பில்லியன் டாலருக்கு வாங்கும் ஒப்பந்தம்

44 பில்லியன் டாலருக்கு வாங்கும் ஒப்பந்தம்

எலான் மஸ்க் டுவிட்டரில் மிக பிரபலமானவர். எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே டுவிட்டரின் 9.2% பங்குகளை மஸ்க் தன் கைவசம் வைத்திருந்தார். மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் டுவிட்டரின் ஆதார ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. இதில், டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டுவிட்டரில் மஸ்க்கை பின்தொடர்பவர்களில் பாதி பேர் போலியானவர்கள் சமீபத்திய தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் மஸ்க் டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை இதுவரை பார்க்கவில்லை என குறிப்பிட்டார்.

20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள்

20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள்

மேலும் டுவிட்டரில் 20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள் இருக்கலாம் என கணக்கிப்படுவதாக குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வரை டுவிட்டரை வாங்கப் போவதில்லை என மஸ்க் குறிப்பிட்டார். டுவிட்டரை மஸ்க் வாங்குவது உறுதி செய்யப்பட்ட உடன் டுவிட்டரின் பங்கு சரிவை சந்தித்தது. இதையடுத்து டுவிட்டரை வாங்குவதாக மஸ்க் அறிவித்தபோது இருந்த பங்கு மதிப்பு தற்போது இல்லை. எனவே மஸ்க் டுவிட்டரை குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஸ்பேம் கணக்குகளை பொது மற்றும் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்தி வெளிப்படியாக உருவாக்க முடியாது. எந்த கணக்குகள் எம்டிஏயூஎஸ் ஆக கணக்கெடுக்கப்படும் என்பதை அறிவது சாத்தியமற்ற செயலாகும் என டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Waiting Period For Elon Musk's Deal is Over: Twitter Says

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X