Vivo V25 இல்ல Vivo V25 Pro-வை வாங்கலாம்னு வெயிட் பண்றீங்களா? டைம் வேஸ்ட்!?

|

வல்லுனர்களின் 'அட்வைஸ்'களை' எதிர்பார்க்காமலேயே, ஒரு நல்ல கேமரா போன் என்றாலே - குறிப்பாக செல்பீ கேமரா போன் என்றாலே - அது விவோ (Vivo) மாடல்கள் தான் என்கிற முடிவுக்கு வரும் வாடிக்கையாளர்கள் இங்கு அதிகம்!

அந்த அளவிற்கு விவோ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் காலூன்றி நிற்கிறது மற்றும் "சும்மா சொல்ல கூடாது" விவோ நிறுவனம் சில சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களையும் தன்வசம் கொண்டுள்ளது.

குறிப்பாக, நிறுவனத்தின் எக்ஸ் சீரீஸ் மாடல்கள். டிஎக்ஸ்ஓமார்க் (DXOMARK) லிஸ்டிங் பக்கம் சென்றால் அங்கே நிச்சயம் ஒரு விவோ எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போனை காணலாம்.

அடுத்த அறிமுகம்... விவோ வி25 மற்றும் வி25 ப்ரோ தான்!

அடுத்த அறிமுகம்... விவோ வி25 மற்றும் வி25 ப்ரோ தான்!

ஸ்மார்ட்போன் கேமரா செக்ஷனில் கெத்து காட்டும் விவோ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன்கள் அதன் 'வி' சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அது விவோ வி25 மற்றும் விவோ வி25 ப்ரோ மாடல்கள் ஆகும்.

விவோ V25 சீரீஸ் ஆனது இதுவரை எங்குமே அறிவிக்கப்படாத நிலைப்பாட்டில் Vivo V23 சீரிஸின் மேம்படுத்தப்பட்ட "வாரிசு" ஆன V25 சீரீஸ் மாடல்கள், எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

வெயிட் பண்றணவங்கள வெறி ஏத்தும் - லான்ச் டைம்லைன்!

வெயிட் பண்றணவங்கள வெறி ஏத்தும் - லான்ச் டைம்லைன்!

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, விவோ வி25 சீரிஸ் ஆனது இந்த ஆண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகம் ஆகுமாம். இந்த தகவல், வரவிருக்கும் வி25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என்று காத்திருக்கும் விவோ ரசிகர்களை சற்றே கடுப்பேற்றி உள்ளது.

மேலும் ​​இந்தியா டுடே டெக் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், இந்நிறுவனம் அதன் வி சீரீஸின் கீழ் Vivo V25 Pro, Vivo V25 மற்றும் Vivo V25e என்கிற மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தலாம்.

வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?

ஆண்டின் பிற்பகுதில் அறிமுகம் ஆகும் என்றால், சரியாக எப்போது?

ஆண்டின் பிற்பகுதில் அறிமுகம் ஆகும் என்றால், சரியாக எப்போது?

கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் வி25 சீரீஸின் முதல் மாடல் - விவோ வி25 ஆக இருக்கலாம்.

மற்றும் இந்த வெண்ணிலா வேரியண்ட் ஆனது இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 17 அல்லது ஆகஸ்ட் 18 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது அறிமுகமாக இன்னும் ஆறு வாரங்கள் ஆகும்.

அப்போது.. வி25 ப்ரோ மாடல் எப்போது அறிமுகமாகும்?

அப்போது.. வி25 ப்ரோ மாடல் எப்போது அறிமுகமாகும்?

மறுகையில் உள்ள Vivo V25 Pro ஆனது வெண்ணிலா மாடல் (விவோ வி25) அறிமுகமான சில வாரங்களுக்கு பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ நிறுவனம் அதன் Vivo V25 Pro உடன் Vivo V25 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் ஒன்றையும் அறிமுகப்படுத்தலாம் என்றும், அது செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?

அப்போது.. விவோ வி25இ மாடல் இந்தியாவிற்கு வராதா?

அப்போது.. விவோ வி25இ மாடல் இந்தியாவிற்கு வராதா?

வரும்! Vivo V25e ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் இது - வழக்கம் போல - சீரீஸின் மிகவும் மலிவான மாடலாக வாங்க கிடைக்கும். இருப்பினும், வி25இ மாடலின் வெளியீடு குறித்து இதுவரை எந்தவொரு லீக்ஸ் தகவலோ அல்லது அதிகாரப்பூர்வ வார்த்தையோ இல்லை.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் விநியோக சங்கிலியின் நிலைமையை பொறுத்து விவோ வி25 சீரீஸின் லான்ச் டைம்லைன் மாறக்கூடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

விவோ வி25 ப்ரோ மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

விவோ வி25 ப்ரோ மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

முன்னதாக வெளியான ஒரு அறிக்கையின் அடிப்படையில், விவோ வி25 ப்ரோ ஆனது 3 ஸ்டோரேஜ் விருப்பங்களின் கீழ் (8GB + 128GB, 8GB + 256GB மற்றும் 12GB + 256GB) வெளியாகும்.

மேலும் ப்ரோ மாடல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.56-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடன் இது 50MP சோனி IMX766V சென்சார், 12MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP போர்ட்ரெய்ட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரவும் வாய்ப்புள்ளது. முன்பக்கத்தில், 32MP செல்பீ கேமரா இருக்கலாம்.

கடைசியாக இது டைமன்சிட்டி 8100 SoC மூலம் இயக்கப்படலாம் மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!

வெண்ணிலா விவோ வி25 மாடலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

வெண்ணிலா விவோ வி25 மாடலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

மறுகையில் உள்ள Vivo V25 ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை வழங்கும் 6.62-இன்ச் அளவிலான FHD+ AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 778G அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 SoC சிப்செட், 44W அல்லது 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 4,500mAh பேட்டரி போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இதன் ரியர் செட்டப் ஆனது V25 Pro-வில் இருப்பதை போன்றே இருக்கலாம். ஆகமொத்தம் வெயிட் பண்றதுக்கு வொர்த் ஆன போன் தான், ஆனால் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நீங்கள் காத்திருக்க தயாரா? இறுதி முடிவு உங்களுடையது!

Best Mobiles in India

English summary
Waiting for Vivo V25 Pro and Vivo V25 India launch that may test your patience Here is why

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X