நீ வா தலைவா.. ரசிகர்களே உயிர்த்தெழுங்கள்.! கம்மி விலையில் இப்படி ஒரு போனா? Redmi வரார்..
Xiaomi நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜனவர் 5, 2023 அன்று வெளியிட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியிடுவதற்கு முன்பாகவே நிறுவனம் இதுகுறித்த தகவலை வெளியிடத் தொடங்கி உள்ளது. ரெட்மி நோட் 12 சீரிஸ் இல் Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் ரெட்மி நோட் 12 சீரிஸ் இல் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Redmi Note 12 5G ஸ்மார்ட்போன் முன்னதாகவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்த அம்சங்களை ஏறத்தாழ கணிக்கமுடிகிறது.

Redmi Note 12 5G: அம்சங்கள்
Redmi Note 12 5G ஸ்மார்ட்போனானது அதன் ப்ரோ மாடல்கள் போன்றே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பின்புற பேனல் மட்டும் சற்று வளைந்த வடிவில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் மிகவும் மெலிதானதாக இது இருக்கும் என சியோமி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன் மையத்தில் பஞ்ச் ஹோல் வசதியோடு செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
Redmi Note 12 5G ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் முழு HD+ தெளிவுத்திறன் உடன் கூடிய சாம்சங் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 1200 nits உச்ச பிரகாச நிலை ஆதரவைக் கொண்டிருக்கிறது. ப்ரோ மாடல்களை விட இதில் அதிக பிரைட்னஸ் ஆதரவு இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
அதேபோல் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது 6nm ஃபேப்ரிக்கேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
Redmi Note 12 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 48 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும். அதேபோல் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இடம்பெற்றிருக்கும். அதேபோல் ஐபி53 சான்றிதழ், 5ஜி, டூயல் சிம், டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவை இணைப்பு ஆதரவுகளாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது.
Redmi Note 12 5G: விலை
Redmi Note 12 5G விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரையிலான விலைப் பிரிவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் இந்தியா, சியோமியின் இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் கடைகளில் இது விற்பனைக்கு கிடைக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ப்ளூ மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் வெளியாகலாம்.
Redmi Note 12 Pro+ 5G குறித்து வெளியான தகவலை பார்க்கையில், Redmi Note 12 Pro+ 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆக இருக்கலாம். தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது.
இந்த தொடர்களில் ப்ரீமியம் அம்சங்களோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ+ 5ஜி இன் விலை மிட்ரேன்ஜ் விலைப் பிரிவைக் கொண்டதாக இருக்கும் என தகவலின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.24,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.26,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.28,999 எனவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications