Home
News

மலிவு விலை ஃபுட் டெலிவரியில் கலக்கும் "Waayu" ஆப்.. ஆஃபர் எப்படி?

பொதுவாக ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்களில் பலருக்கு எந்த ஆப்-பில் எப்போது ஆஃபர் வரும், எந்த நேரத்தில் வாங்கினால் மலிவான விலையில் கிடைக்கும் என்பது நன்றாக தெரியும். இவர்களுக்கு புதிதாக வந்துள்ள வாயு (Waayu) ஃபுட் டெலிவரி ஆப் வரப்பிரசாதமாகவே இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆப்-பில் ஸ்விகி, சோமேட்டோவை விட மலிவான விலையில் உணவுகளை வாங்கிக்கொள்ள முடியும். இதுகுறித்த விவரம் இதோ.

பாலிவுட்டின் பிரபல நடிகரும், ஹோட்டல் உரிமையாளருமான சுனில் ஷெட்டி ஸ்விகி (Swiggy), சோமேட்டோ (Zomato), ஈட்ஷூர் (EatSure) போன்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி (Online Food Delivery) நிறுவனங்களுக்கு நிகராக 'வாயு' என்ற புதிய நிறுவனத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த நிறுவனம் மும்பையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இன்றைய நவீன காலத்தில் யாரும் வீட்டில் சமைப்பதை விரும்புவது கிடையாது.

மலிவு விலை ஃபுட் டெலிவரியில் கலக்கும்

அவர்களுக்கு பிடித்த உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் வீடு தேடி வந்து விடுவதால், ஆர்டர் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். ஆன்லைன் மூலம் ஃபுட் ஆர்டர் செய்வதால், சமைப்பதற்கான நேரம், கடைக்கு சென்று வாங்குவதற்கான செலவு, அலைச்சல் உள்ளிட்டவை கிடையாது என்பதால், ஃபுட் டெலிவரி நிறுவனங்களின் விற்பனை படுஜோராகவே இருக்கிறது.

இன்றைய நிலவரப்படி, ஸ்விகி, சோமேட்டோ, ஈட்ஷூர் ஆகிய மூன்று ஆன்லைன் ஃபுட் ஆர்டர் நிறுவனங்கள் மட்டுமே நாடு முழுவதும், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உணவை கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கின்றன. இதில் ஸ்விகி, சோமேட்டோ நிறுவனங்களுக்கு நாள்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக டெலிவரி சார்ஜ்களை, அந்த நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்மையில் கூட ஸ்விகி நிறுவனம் பிளாட்ஃபார்ம் கட்டணம் (Platform Fee) என்ற பெயரில் கூடுதலாக 2 ரூபாயை வசூலிக்க தொடங்கி உள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, "வாயு" ஃபுட் டெலிவரி சேவையை தொடங்கியுள்ளார்.

இந்த வாயு ஆப் மூலம் ஃபுட் ஆர்டர் செய்தால், ஸ்விகி, சோமேட்டோவை விட 20 முதல் 30 சதவிகிதம் வரையில் மலிவான விலையில் ஃபுட்ஸ் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு பிடித்தமான உணவகத்தை தேர்வு செய்துவிட்டு, அங்கிருந்து 1 மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஃபுட் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதற்கு வெறும் ரூ.1000 மட்டுமே வசூலிக்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், ஸ்விகி, சோமேட்டோவில் வழங்கப்படும் ஆஃபர்களை போல, இதிலும் வழங்கப்படும். அத்துடன் கூப்பன்களும் உள்ளன. தற்போது இந்த ஆப் சேவை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மட்டும் முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் முக்கிய நகரங்களில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மலிவு விலையில், விரைவாக ஃபுட் டெலிவரி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாக சுனில் ஷெட்டி தெரிவித்தார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Waayu food delivery app Cheaper than Zomato, Swiggy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X