ISRO-வா கொக்கா.. ககன்யான் திட்டத்தில் டிவிஸ்ட்.. 4 ஆண் வீரர்களுக்கு துணையாக விண்வெளி செல்லும் 1 பெண் ரோபோ..
இஸ்ரோவின் (ISRO) நீண்ட நாள் கனவு நினைவாகப்போகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவு திட்டமான 'ககன்யான்' (Gaganyaan) திட்டம் இப்போது முழுவீச்சில் வேகமாக முன்னேறி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்திற்கு முன்பாக ஒரு பெண் ரோபோவை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
வியோமித்திரா" (Vyommitra): விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, ஒரு சோதனை முயற்சியாக "வியோமித்திரா" (Vyommitra) என்ற பெண் ரோபோவை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும். இதில் 4 வீரர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டார்.

பெண் ரோபோ: இந்த 4 விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்லுவதற்கு முன்பாக, பாதுகாப்பு நலன் கருதி இஸ்ரோ 2 சோதனை ஓட்டங்களை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் சோதனை ஓட்டத்தின் போது, காலி விண்கலத்தை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதனை தொடர்ந்து நடத்தப்படும், இரண்டாம் சோதனை ஓட்டத்தில் இஸ்ரோ வியோமித்திரா என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
4 விண்வெளி வீரர்கள்: இதற்கு அடுத்து, இறுதியாக 4 விண்வெளி வீரர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. இந்தியா அதன் சொந்த முயற்சியில் உருவாக்கி வரும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை, விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோவின் இந்த பெண் ரோபோட் (India's female humanoid robot) முக்கிய பங்கை கொண்டுள்ளது.
வியோமித்திரா என்றால் என்ன? இந்த பெண் ரோபோட் விண்வெளிக்கு செல்லவிருக்கும் மனிதர்களுடனும் பயணம் செய்யவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பெண் ரோபோட் மனித உருவத்தில் (ISRO's humanoid robot) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெண் ரோபோவை இஸ்ரோ ஏன் வியோமித்ரா என்று பெயரிடப்பட்டது தெரியுமா? வியோமித்திரா-வா? அப்படி என்றால் என்ன?
ஆளில்லா ககன்யான் பயணம்: இந்த பெயருக்கு என்ன பொருள் என்று பார்க்கையில், வியோமித்ரா என்பது வியோமா (விண்வெளி) மற்றும் மித்ரா (நண்பர்) என்ற இரண்டு பெயர்களின் கலவையுடன் வருகிறது. இதுவொரு சமஸ்கிருத வார்த்தையாகும். வியோமித்ரா என்பது பாதி மனித உருவத்துடன் இயங்கும் ரோபோவாகும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு முன்னோட்டமாக முதல் ஆளில்லா ககன்யான் பயண சோதனைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கும் பெண் ரோபோ: இந்த பெண் ரோபோ என்னென்ன வேலைகளை செய்யும்? இந்த பெண் ரோபோட் கடந்த 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இஸ்ரோ திட்டமிட்டுள்ள மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் ஏதேனும் எதிர்பாராத இடர்கள் ஏற்பட்டால், அதை எச்சரிக்கும் வகையில் சுவிட்ச் பேனல் செயல்பாடுகளை இது கட்டுப்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த பெண் ரோபோ, விண்வெளி வீரர்களுக்கு ஒரு துணையாகவும் இருக்குமென்று இஸ்ரோ கூறியுள்ளது.
ISRO-வின் முதல் மனித உருவ ஹியூமனாய்டு: விண்வெளியில் வீரர்கள் அதிகமாக தனிமையை உணர்வார்கள் என்பதனால், அவர்களின் மனநிலையை பலப்படுத்த தேவையான உரையாடல்களை இந்த பெண் ரோபோட் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. விண்வெளி பயணத்தின் பொழுது வீரர்கள் கேட்கும் அணைத்து வகையான கேள்விகளுக்கும் இந்த ரோபோட் பதில் அளிக்கும். இஸ்ரோ உருவாக்கும் முதல் மனித உருவ ஹியூமனாய்டு ரோபோட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏரோடைனமிக்ஸ் ஆற்றல்: இது பூமியில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராக்கெட்டின் எரிவாயு, மின்சாரம், உயிர் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டு தகவலை பயணத்தின் போது வழங்கும் மற்றும் கண்காணிக்கும். விண்வெளி பயணத்தின்போது Aerodynamic ஆற்றலால் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் வகையில் இந்த வியோமித்ரா ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டம் எத்தனை நாள் பயணம்: இந்த ககன்யான் திட்டத்தின் நோக்கம் 4 விண்வெளி வீரர்களை மூன்று நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்புவதாகும். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்புவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோளாக இருக்கிறது. இந்த விண்வெளி பயணம் 400 கிமீ சுற்றுவட்டப்பாதையில் விண்வெளியில் இந்த பயணம் நிகழும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
விண்வெளிக்கு அனுப்பும் இந்திய வீரர்களை மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரவும் இஸ்ரோ ஒரு திட்டத்தை சரியாக வகுத்துள்ளது. வீரர்களை பத்திரமாக இந்திய பெருங்கடல் நீரில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications