Home
News

சுவற்றில் ஒட்டியது போல் இருக்கும்- ரூ.12,999-க்கு தூக்கலான காட்சி, டிடிஎஸ் உடன் வியூ ப்ரீமியம் ஸ்மார்ட்டிவி!

லினிக்ஸ் ஓஎஸ், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவோடு இந்தியாவில் வியூ ப்ரீமியம் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வியூ ப்ரீமியம் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ரூ.12,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

வியூ ப்ரீமியம் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி

வியூ ப்ரீமியம் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி

வியூ ப்ரீமியம் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி, நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்டிவியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வியூ ஸ்மார்ட்டிவியானது ஒற்றை 32 இன்ச் அளவு விருப்பத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இது 64 பிட் குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. வியூ ப்ரீமியம் 32 ஸ்மார்ட்டிவானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. 500 நிட்ஸ் வரை உச்ச பிரகாச வரம்பைக் கொண்டிருக்கிறது. இந்த புதிய மாடலில் 20 வாட்ஸ் வெளியீடு கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் அமைப்பைக் கொண்டிருக்கிறது.

டால்பி ஆடியோ ஆதரவு

டால்பி ஆடியோ ஆதரவு

இந்த ஸ்மார்ட்டிவியானது டால்பி ஆடியோ ஆதரவோடு வருகிறது. இது டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் ஆடியோ தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. வியூ டிவி லினிக்ஸ் இயங்குதளத்துடன் வருகிறது. வியூ ஸ்மார்ட் ரிமோட் ஓடிடி அணுகலோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது யூடியூப் நெட்பிளிக்ஸ் போன்ற உள்கட்டமைப்பு வசதியோடு வருகிறது.

வியூ ப்ரீமியம் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியின் விலை மற்று் கிடைக்கும் தன்மை

வியூ ப்ரீமியம் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியின் விலை மற்று் கிடைக்கும் தன்மை

புதிய வியூ ப்ரீமியம் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது இந்தியாவில் ரூ.12,999 என்ற விலையுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வருகிறது. தேர்ந்தெடுக்கப்ட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களை பயன்படுத்தி வாங்கும் போது பிளிப்கார்ட் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. அதேபோல் வியூ ஸ்மார்ட்டிவி ஒரு வருட உள்நாட்டு உத்தரவாதத்தை வழங்குகிறது.

வியூ ப்ரீமியம் விவரக்குறிப்புகள்

வியூ ப்ரீமியம் விவரக்குறிப்புகள்

வியூ ப்ரீமியம் ஸ்மார்ட்டிவியானது 32 இன்ச் அளவுகளில் (1,366x768 பிக்சல்கள்) தீர்மானத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 178 டிகிரி கோண பார்வை அனுபவத்தை வழங்குகிறது. 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 300 நிட்ஸ் பிரகாச அனுபவம் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இந்த டிவியின் குறிப்பிடத்தக்க அம்சமானது பிரேம் இல்லாத வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இது அடாப்டிவ் கான்ட்ராஸ்ட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி இருண்ட பகுதியில் முழு ப்ளாக் அம்சத்தை வழங்கி ஒளி நிறைந்த இடத்தில் மேலும் ஒளிரச் செய்து படங்களை பார்ப்பதற்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இந்த வியூ ஸ்மார்ட்டிவியானது 64 பிட் குவாட் கோர் செயலி மற்றும் 1 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. இது 4 ஜிபி உள்சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. இந்த டிவி லினிக்ஸ் இயங்குதளத்தின் மூலம் இயங்குகிறது.

20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் அம்சம்

20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் அம்சம்

புதிய வியூ ப்ரீமியம் 32 ஸ்மார்ட்டிவியானது டால்பி ஆடியோ ஆதரவோடு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்பீக்கர்கள் சிறந்த சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை உறுதி செய்கிறது. டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் தொழில்நுட்பம் இதில் அடங்கும். வெளிப்புற ஒலி அமைப்புகளுக்கான ஆதரவு, ஆடியோ ரிட்டர்ன் சேனல், ஆப்டிகல் ஆக்ஸ் உள்ளீடு உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது.

விரைவான அணுகல் அனுபவம்

விரைவான அணுகல் அனுபவம்

அதுமட்டுமின்றி வியூ ப்ரீமியம் 32 ஸ்மார்ட்டிவியானது காட்சிகள் இல்லாமலேயே இசையை மட்டும் இயக்குவதற்கு அதாவது ஆடியோ மட்டும் செயல்படுத்தவும் இது அனுமதிக்கிறது. வியூ ப்ரீமியம் 32 ஸ்மார்ட்டிவியானது வியூ ஐஆர் ரிமோட் நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, யூடியுப் மியூசிக்ஸ ஆப்ஸ் மற்றும் இன்டர்நெட் பிரவுசர் உள்ளிட்ட ஓடிடி அணுகலுக்கான விரைவு அணுகல் அனுபவத்தை வழங்குகிறது, இது வியூ AnyView Cast ஆதரவுடனான ஸ்க்ரீன் மிரரிங் அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி சினிமா நைட் பயன்முறையோடு வருகிறது. இது 50,000 மணி நேரத்துக்கும் அதிகமான இயக்க நேரத்தை வழங்குவதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vu Premium 32 SmartTV Launched in India With 20W Speakers, 60HZ Refresh Rate and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X