உலகின் முதல் 100' இன்ச் டிவி.. Vu விற்பனை செய்யும் மாஸ்ட்டர் பீஸ் TV.. விலைய கேட்ட அரண்டு போயிடுவீங்க..
உலகத்தின் முதல் 100' இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த Vu நிறுவனம் இப்போது மற்றொரு மாஸ்டர் பீஸை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் இப்போது வியூ 98 மாஸ்டர்பீஸ் (Vu 98 Masterpiece) என்ற ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்துள்ளது.
Vu டெலிவிஷன்ஸ் இந்தியாவில் Vu 98 மாஸ்டர்பீஸ் என்ற பெரிய சைஸ் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. Vu நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வாடிக்கையாளர்களின் வீட்டிற்குள் புது தியேட்டர் அனுபவத்தை வழங்கப்போகிறது என்று கூறியுள்ளது. இந்த பெரிய ஸ்மார்ட் டிவியை நிறுவனம் மிகவும் உறுதியான உலோகங்களை கொண்டு உருவாகியுள்ளது.

இதில் எண்ணற்ற அம்சங்களையும் பேக் செய்துள்ளது. இந்த புதிய Vu 98 Masterpiece டிவி பற்றிய முழு விபரங்கள் மற்றும் விலை பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம். இந்த புதிய வியூ 98 மாஸ்டர் பீஸ் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் வெறும் ரூ. 6,00,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா சைஸ் ஸ்மார்ட் டிவி இப்போது அமேசான் (Amazon) தளம் வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும்.
Vu பெரிய அளவிலான டிவிகளை தயாரிப்பதில் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டில் உலகின் முதல் மற்றும் ஒரே 100' இன்ச் ஸ்மார்ட் டிவியை உருவாக்கி அறிமுகப்படுத்திய புகழ்பெற்ற நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வியூ நிறுவனத்தின் கூற்றுப்படி, Vu 98 மாஸ்டர்பீஸ் டிவி 3,000 டென்சைல் ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளின் வலிமை மற்றும் அழகியல் Vu 98 மாஸ்டர்பீஸ் டிவி ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருப்பதை உறுதிசெய்கிறது. இது வால் மவுண்ட், டெஸ்க் ஸ்டாண்டிங் போன்ற பல விதங்களில் இன்ஸ்டால் செய்யக்கூடிய அனுபவத்துடன் வருகிறது. இந்த டிவியின் மிகப் பெரிய டிஸ்பிளே ஆனது 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது.
இது டால்பி விஷன் மற்றும் HDR10+ உள்ளடக்கத்திற்கான ஆதரவின் மூலம் துடிப்பான வண்ணங்கள் மற்றும் உயிரோட்டமான வீடியோ அனுபவத்தை தியேட்டர் தரத்தில் வழங்கி அசத்துகிறது. Vu 98 மாஸ்டர் பீஸ் டிவியில் இன்பில்ட் ஆக 204Watt DJ சப்வூப்பர் உடன் வருகிறது. இது தெளிவான மற்றும் ஆழமான பாஸ் ஆடியோவை அதிவேக அனுபவத்திற்காக வழங்குகிறது.

கூடுதலாக, டிவி புளூடூத் இணைப்பை ஆதரிக்கிறது. இதில் பெர்சனல் கஸ்டமைசேஷன் விருப்பத்துடன் வருகிறது. இது சிறந்த மற்றும் தரமான ஆடியோ அமைப்பிற்காக வெளிப்புற ஸ்பீக்கர்களுடன் எளிதாக இணைக்க அனுமதிக்கிறது. இந்த டிஸ்பிளே 100 சதவீதம் ஆன்ட்டி-கிளேர் அம்சம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது.
எனவே இந்த டிஸ்பிளே மிகவும் பிரகாசமானது மற்றும் சூரிய ஒளியில் இருக்கும் அறைகள் மற்றும் ஸ்பாட்-லைட்டிங் கொண்ட அறைகளில் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கக்கூடியது. இவை அனைத்தும் அதன் A+ தர பிளாக் ஸ்கிரீன் டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. இந்த டிவிக்கு, ஹோம் தியேட்டர் அனுபவத்திற்கு தேவைப்படும் ஒற்றைச் செயல்பாட்டு கொண்ட டார்க் ரூம்களை கட்டத் தேவையில்லை.
Vu 98 மாஸ்டர்பீஸ் டிவியானது பல சிறப்பான டிவி மோட் விருப்பங்களை வழங்குகிறது. அதன் வடிவமைப்பு முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் இருந்து அழகாக இருக்கிறது. இது உங்கள் அறையை இன்னும் அழகாக்கும் அலங்கார பொருளாகவே மாறி, பார்வைக்கு ஈர்க்கும் மையமாக அமைகிறது. டிவி பயனர் வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் எல்லா வயதினருக்கும் பொருத்தமான பயனர் நட்பு இடைமுகத்தை வழங்குகிறது.
உங்கள் வீட்டில் ஹோம் தியேட்டர் அனுபவத்தை, ஒரு தரமான மாஸ்டர் பீஸ் டிஸ்பிளே கொண்ட பெரிய டிஸ்பிளே டிவி உடன் அலங்கரிக்க விரும்பினால், நீங்கள் வாங்க வேண்டிய டிவி இது தான். ஆனால், 6 லட்சம் என்ற விலையை எல்லோரும் விரும்பமாட்டார்கள்.


Click it and Unblock the Notifications








