Home
News

சுவரே தெரியாது., முழுவதும் டிவிதான்: வியூ மாஸ்டர்பீஸ் க்ளோ க்யூ எல்இடி டிவி- மூன்று அளவுகள், டாப் அம்சங்கள்!

வியூ மாஸ்டர்பீஸ் க்ளோ எல்இடி டிவிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய தயாரிப்புகள் அமேசான் மற்றும் வியூ இணையதளம் மூலமாக விற்பனைக்கு கிடைக்கும். வியூ டிவி அதன் சமீபத்தில் வியூ மாஸ்டர்பீஸ் க்ளோ எல்இடி டிவிகளை அறிவித்துள்ளது. இந்த டிவியானது மூன்று வெவ்வேறு அளவுகளில் வருகிறது. அது 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவு ஆகும்.

வியூ மாஸ்டர்பீஸ் க்ளோ க்யூஎல்இடி டிவிகள் அம்சங்கள்

வியூ மாஸ்டர்பீஸ் க்ளோ க்யூஎல்இடி டிவிகள் அம்சங்கள்

வியூ டிவி ஆனது திரைப்பட தயாரிப்பாளர் பயன்முறையுடன் வருகிறது. இந்த அம்சம் ஆனது இயக்குனர் உருவாக்கிய பார்வை அனுபவத்தை சரியாக காட்டுகிறது. இந்த பயன்முறையானது வண்ணங்கள் மற்றும் விளைவுகளை உண்மையாக இருப்பதை குறிக்கிறது. வியூ மாஸ்டர்பீஸ் க்ளோ க்யூஎல்இடி டிவி லோக்கல் டிம்மிங் மற்றும் 800 நிட்ஸ் பிரகாசத்தை கொண்டிருக்கிறது. நிறுவன தகவல்படி, இது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீதத்தைக் கொண்ட ஒரே க்யூஎல்இடி ஆகும். ஆடியோவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்டிவியில் சப் வூஃபர் ஆதரவோடு 100 வாட்ஸ் ஸ்லீக் அர்மானி அமைப்புடன் வருகிறது.

வியூ மாஸ்டர்பீஸ் க்ளோ எல்இடி டிவி விலை

வியூ மாஸ்டர்பீஸ் க்ளோ எல்இடி டிவி விலை

வியூ மாஸ்டர்பீஸ் க்ளோ எல்இடி என்பது ஸ்பாடிஃபை கொண்ட முதல் ஸ்மார்ட்டிவி நிறுவனமாக இருக்கிறது. ரிமோட்டில் ஒரே கிளிக்கில் அது உங்கள் ப்ளே லிஸ்ட்டை இயக்கும். குவாட் கோர் செயலி ஆதரவோடு இது 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு ஆதரவை கொண்டுள்ளது. இது உள்ளமைக்கப்பட்ட க்ரோம்கேஸ்ட் மூலம் மொபைலில் இருந்து டிவிக்கான உள்ளடக்கத்தை வழங்குகிறது. இந்த புதிய டிவிகள் ஆனது அமேசான் மற்றும் வியூ ஸ்டோர்.காம்-ல் கிடைக்கும். ஆர்மானி கோல்டு மெட்டல் விருப்பத்தில் வரும் இந்த ஸ்மார்ட்டிவியின் 55 இன்ச் மாடல் ரூ.74,999 ஆகவும், 65 இன்ச் ரூ.99,999 ஆகவும் 75 இன்ச் மாடல் ஆனது ரூ.1,79,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெசல் லெஸ் டிஸ்ப்ளே

பெசல் லெஸ் டிஸ்ப்ளே

வியூ டிவி பெசல் லெஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் துல்லியமான அர்மானி கோல்ட் ப்ரீமியம் அலுமனிய கோல்ட் ப்ரீமியம் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிவியானது ஹேண்ட்ஸ் ஃப்ரீ குரல் தேடலுக்கான ஃபார் ஃபீல்ட் அரே மைக்ரோஃபோனும் பொருத்தப்பட்டுள்ளது. மூவி ஃபாஸ்ட் ஃபார்வேர்ட், சத்தம் கூட்டுதல் உள்ளிட்ட பல தேடுதல் கட்டளையை இதன் மூலம் மேற்கொள்ள பயனரை அனுமதிக்கிறது. கூடுதலாக வியூ ஃபிராக்டலில் இருந்து ஈர்க்கப்பட்ட FractalVu தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது. ப்ரீமியம் மற்றும் ஜூம் அணுகலோடு இந்த டிவி வருகிறது.

வியூ இந்தியா புதிய ஸ்மார்ட் டிவி

வியூ இந்தியா புதிய ஸ்மார்ட் டிவி

வியூ இந்தியா புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் டிவியில் QLED டிஸ்ப்ளே மற்றும் உள்ளமைக்கப்பட்ட 50W சவுண்ட்பார் உடன் வருகிறது. இந்த டிவியின் ப்ரீமியம் விஷயம் அதன் விலைதான். வியூ மாஸ்ட்ர் பீஸ் டிவி விலை ரூ.3.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வியூ ஸ்மார்ட்டிவி விலை மட்டும் ப்ரீமியம் அல்ல அதன் வடிவமைப்பும் ப்ரீமியம் ரகமாகவே இருக்கின்றன. வியூ டிவி சிங்கிள் பிளாக் மற்றும் ஆர்மணி கோல்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது. 85 அங்குல 4கே டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் எச்டிஆர் 10 ப்ளஸ் டால்பை விஷன் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0  ஆதரவு

ஆண்ட்ராய்டு 9.0 ஆதரவு

வியூ மாஸ்டர்பீஸ் டிவி ஆண்ட்ராய்டு 9.0 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் அணுகல் முறையுடன் கிடைக்கிறது. இது Dts மெய்நிகர் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜியுடன் வருகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது. வைஃபை, ப்ளூடூத் 5.0, நான்கு எச்டிஎம்ஐ போர்ட்கள், பல யூஎஸ்பி போர்ட்கள், ஆப்டிகள் பாயிண்ட் மற்றும் ஒஎக்ஸ் போர்ட் உள்ளடக்கம்.

File Images

Best Mobiles in India

English summary
VU Launched its Masterpiece Glo QLED TV in 55 inch, 65 inch and 75 inch Sizes: Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X