Home
News

Voter ID முகவரியில் மாற்றம்.. உடனே இதை செய்துடுங்க.. மொபைலில் 5 நிமிடங்களில் வேலை முடியும்.. எப்படி செய்வது?

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் மூன்று நாட்களில் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் வேறு முகவரிக்கு நீங்கள் மாறி இருந்தால் அதை ஆன்லைனில் மாற்றிக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆகவே, உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் எப்படி முகவரி திருத்தம் செய்யலாம்?

வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாறி இருந்தால் அதை நீங்கள் கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். பலர் வேறு முகவரிக்கு மாறி இருந்தாலும், வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பழைய முகவரிக்கு சென்று வாக்களிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். அதேபோல வேறு இடத்திற்கு பணி நிமித்தமாக சென்றவர்களும் சொந்த ஊருக்கு சென்றே வாக்களிப்பார்கள்.

Voter ID முகவரியில் மாற்றம்.. உடனே இதை செய்துடுங்க.. 5 நிமிடம் போதும்!

ஏனென்றால், முகவரியை மாற்ற வேண்டும் என்றால், வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் அல்லது தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டி இருப்பதால், வாக்காளர்கள் காலம் தாழ்த்தினர். ஆனால், இப்போது முற்றிலும் ஆன்லைனிலேயே அதை செய்து கொள்ள முடியும் என்பதால், வாக்காளர்கள் எளிதாக முகவரியை மாற்றிக் கொள்ள முடியும்.

இதனால், உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பழைய முகவரிக்கு சென்று வாக்களிப்பதை எளிதாக தவிர்க்கலாம். உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் முகவரியை மாற்ற (Voter ID Card Address Change) விரும்பும் பட்சத்தில் பின்வரும் ஆன்லைன் விண்ணப்ப முறையை பின்பற்றவும்.

முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர்கள் போர்ட்டலுக்கு (https://voterportal.eci.gov.in/) செல்ல வேண்டும். அங்கு இருப்பிடத்தை மாற்றுதல் (Shifting of Residence) மற்றும் படிவம் 8-ஐ நிரப்புக என்னும் டேப் தோன்றும். அதை செய்து உள்ளே சென்றுவிடுங்கள். இப்போது, உங்களது, மொபைல் நம்பர், இமெயில் முகவரி அல்லது ஈபிஐசி நம்பர் கேட்கப்படும்.

அதோடு பாஸ்வேர்ட் கேட்கப்படும். இந்த பாஸ்வேர்ட்டை மொபைல் நம்பர் (Mobile Nomber) மற்றும் இமெயில் முகவரியை (Email Address) கொடுத்து, நீங்களே புதிதாக உருவாக்கி கொள்ளலாம். அப்படி உருவாக்கிய பின்பு, மொபைல் நம்பர் அல்லது இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லுங்கள். இப்போது, செல்ப் (Self) ஆப்ஷனை தேர்ந்தெடுத்தெடுங்கள்.

இருப்பிடத்தை மாற்றுதல் (சட்டமன்றத் தொகுதிக்குள்) ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்றம்/நாடாளுமன்றத் தொகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை செய்த பிறகு ஆதார் எண் (Aadhaar Number), மொபைல் நம்பர் மற்றும் இமெயில் முகவரியை கொடுக்க வேண்டி இருக்கும்.

இதன் பிறகு தற்போது நீங்கள் இருக்கும் முகவரிக்கான ஆதார சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். இந்த சான்றிதழல்களுக்கு ஆதார் கார்டு, பாஸ்போர்ட், மின்கட்டண பில், பேங்க் பாஸ்புக் போன்ற ஆவணங்களை பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வளவுதான் படிவம் 8 பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இப்போது, நீங்கள் கொடுத்த விவரங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள்.

இறுதியா சமர்பிப்பு (Submit) பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்த விண்ணப்பம் அப்டேட் செய்யப்பட்டுவிட்டால், வாக்காளர் தகவல் சீட்டை டவுன்லோட் செய்து, மாற்றப்பட்ட இருப்பிடத்தில் இருந்தே வாக்களிக்கலாம். தாமதமானால், பழைய தொகுதியில் வாங்களிக்க வேண்டி இருக்கும்.

நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டுக்கு இந்த தேதியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல வாக்கு எண்ணிக்கை ஜூன் 1ஆம் தேதி நடக்கிறது. இந்த காலங்களில தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Voter ID Card Address Change Within 5 Minutes How to Apply Online Using Mobile Number
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X