உலகின் முதல் தானியங்கி எலக்ட்ரிக் பஸ் வால்வோ 7900 சிங்கப்பூரில் அறிமுகம்!
தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப துறையில் வால்வோ மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
சிங்கப்பூர் ஏற்கனவே தானியங்கி டாக்சி, டிரக் ஆகியவற்றை இயக்கி வருகிறது மற்றும் மற்றும் தானியங்கி ஷட்டில் பஸ் சோதனை ஓட்டமும் நடந்துவருகிறது. சுய-ஓட்டுநர் தொழில்நுட்பங்களின் முன்னணி நாடாக மாற சிங்கப்பூர் கவனம் செலுத்திவருகிறது. நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (NTU) உள்ள பைலட் லான்ச்-ஐ பயன்படுத்தி சிங்கப்பூர் உலகின் முதல் முழுஅளவு தானியங்கி மின்சார பஸ்ஸை வோல்வோவுடன் இணைந்து பரிசோதித்து வருகிறது. இந்த மின்சார பஸ் வோல்வோ 7900 என அழைக்கப்படுகிறது.

தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப துறையில் வால்வோ மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சீனாவில் தானியங்கி கார்கள் பரிசோதித்துள்ளது. மேலும் நோர்வே-ல் உள்ள சுரங்கங்கள் மற்றும் பிரேசிலில் உள்ள கரும்பு தோட்டங்களிலும் தானியங்கி டிரக்குகளை இயக்கிவருகிறது. டிரைவர் கேபினே இல்லாத டிரக்குகளையும் இந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

தானியங்கி எலக்ட்ரிக் பஸ்
புதிய சோதனை ஓட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் வோல்வோ 7900,பொதுப் போக்குவரத்து சேவை வழங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் மற்றும் முழுவதுமான தானியங்கி எலக்ட்ரிக் பஸ் ஆகும். ஓரடுக்கு பேருந்தான இதில் 36 இருக்கைகள் இருக்கும். எனினும் மொத்தம் 80 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த பேருந்து, டீசல் மூலம் இயங்கும் இதே அளவுள்ள பேருந்தை காட்டிலும் 80% குறைந்த ஆற்றலையே உபயோகிக்கும்.

வால்வோ 7900
வால்வோ 7900 பேருந்து வளாகத்தை சுற்றி அதன் வழி கண்டுபிடிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு வழிசெலுத்தல் மென்பொருளைப் பயன்படுத்துகிறது. LIDAR உள்ளிட்ட மேம்பட்ட சென்சார்கள், 3D படங்களை எடுக்கும் திறன் கொண்ட ஸ்டீரியோ-விஷன் கேமராக்கள், ஒரு சென்டிமீட்டர் அளவு துல்லியத்துடன் இருப்பிடத்தை வழங்கும் வகையிலான மேம்பட்ட உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன. வோல்வோ 7900 பேருந்தில் உள்ள இயக்க அளவீட்டு அலகு, பஸ் கோண இயக்கத்தை கண்காணித்து சீரற்ற நிலப்பரப்புகளில் கூட ஒரு மென்மையான பயணத்தை வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.

சப்ரா சுரேஷ்
NTU பேராசிரியர் சப்ரா சுரேஷ் கூறுகையில், 'இந்த முழுமையான தன்னியக்க எலக்ட்ரிக் பஸ், அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, திறமையான, நம்பகமான மற்றும் வசதியான பயணத்தை வழங்கும் வகையில் எதிர்கால பொது போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும். மனிதர்களின் நிலை மற்றும் வாழ்க்கை தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கான சோதனை களமாகவும், பல புதுமைகளின் பிறப்பிடமாகவும் இருக்கும் விரைவில் NTU ஸ்மார்ட் வளாகத்தில் இந்த பேருந்து விரைவில் சோதனை செய்யப்படும்' என தெரிவித்தார்.

பாஸ்ட் சார்ஜ்
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு தானியங்கி வாகனங்கள் ஒன்றும் புதிதல்ல. 2013 ஆம் ஆண்டே இந்த வளாகத்தில் தானியங்கி ஷட்டில் இயக்கத்திற்கு வந்தது. எட்டு இருக்கைகள் கொண்ட நாவியா வாகனம் 2-கிமீ பாதையில் இயங்கிவருகிறது. இந்த வளாகத்தைச் சுற்றி அதன் உள்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ள 300-kW பாஸ்ட் சார்ஜ் போர்ட்களை வால்வோ 7900 எலக்ட்ரிக் பஸ் பயன்படுத்தி கொள்ளலாம். தானியங்கியாக சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சார்ஜிங் ஸ்டேசன்கள், வெறும் மூன்று முதல் ஆறு நிமிடங்கள் பேட்டரியை சார்ஜ் செய்யும் திறன் கொண்டவை.
7900 பேருந்து
முதலாவது வோல்வோ 7900 பேருந்து என்.டி.யூ வளாகத்தில் ஒரு நிலையான பாதையில் தனது சேவையை விரைவில் தொடங்கும். இரண்டாவது வால்வோ 7900 பேருந்து சிங்கப்பூர் பொது போக்குவரத்து சேவை வழங்குநர் மூலம் சோதனைக்கு வைக்கப்படும். இந்த அற்புதமான தானியங்கி எலக்ட்ரிக் பஸ் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications