பாதிக்கு பாதி விலையில் AC.. ஸ்ப்ளிட் ஏசியே இவ்வளவு கம்மி விலையா? விட்றாதீங்க.. போனா வராது.. எந்த மாடல்?
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க புதிதாக ஏசி (New AC) வாங்கலாமா? என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் நேரடியாக 50% தள்ளுபடியுடன் ஸ்ப்ளிட் ஏசி (Split AC) வாங்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படி உங்கள் வீட்டை குளுகுளு கூலிங் ஆக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஏசி என்று அழைக்கப்படும் ஏர் கண்டிஷனரின் (Air conditioner) தேவை இப்போது மிக முக்கியமானது போல் தெரிகிறது. வெயில் காலத்தில் சூரியனின் வெப்பப்பிடியில் இருந்து தப்பிக்க மக்கள் இப்போது ஏர் கூலர்கள் (air coolers) மற்றும் ஏர் கண்டிஷனர்களையே பெரிதும் நம்பி இருக்கின்றனர். சம்மர் ஆரம்பித்துவிட்டால் ஏசி விற்பனை சூடு பிடிக்கும் என்பதனால் பெரியளவில் நம்மால் தள்ளுபடியை எதிர்பார்க்க முடியாது.

பாதிக்கு பாதி விலையில் AC.. ஸ்ப்ளிட் ஏசியே இவ்வளவு கம்மி விலை:
ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத வகையில் வோல்டஸ் (Voltas) நிறுவனம் அபார தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதுவரை எந்தவொரு ஏசி பிராண்டும் (AC brands) வழங்காத சலுகையை வோல்டஸ் (Voltas) நிறுவனம் இப்போது வழங்கியுள்ளது. வோல்டஸ் பிராண்டின் வோல்டஸ் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (Voltas 1.5 ton 3 Star, Inverter Split AC) மாடல் மீது தான் டாடா (TATA) நிறுவனம் இப்போது நேரடியாக 50% தள்ளுபடியை வழங்கியுள்ளது.
டாடா குழுமத்தின் தயாரிப்பான வோல்டஸ் ஏசி மாடல்கள் இந்தியாவின் தலைசிறந்த ஏசி மாடலாக திகழ்கின்றன. அந்த வரிசையில், அதிக மின்சார தேவை இல்லாமல் இயங்கும் தரமான ஏசி மாடல்களை நிறுவனம் இப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல், இந்திய சந்தையில் இப்போது இன்வெர்டர் ஏசி மாடல்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது என்பதானல், வோல்டஸ் நிறுவனம் அதன் இன்வெர்டர் ஏசி மாடல் மீது 50% நேரடி விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது.
வோல்டஸ் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (Voltas 1.5 ton 3 Star, Inverter Split AC):
வோல்டஸ் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (Voltas 1.5 ton 3 Star, Inverter Split AC) மாடல் சாதனம் ஒரு இன்வெர்டர் ஏசி மாடலாகும். இது காப்பர் காயில் உடன் வருகிறது. இந்த புதிய ஏசி மாடல் 4 இன் 1 அட்ஜஸ்டபிள் மோட் (4-in-1 Adjustable Mode) அம்சத்துடன் வருகிறது. இந்த மோட்கள் அறையில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றார் போல இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏசி மாடல் 1.5 டன் மாடல் என்பதனால், 150 சதுர அடி கொண்ட அறைக்கு ஏற்றதாக இருக்கும். இந்த ஏசி மாடலின் அசல் விலை அமேசான் தளத்தில் ரூ. 67,990 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வோல்டஸ் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (Voltas 1.5 ton 3 Star, Inverter Split AC) மீது இப்போது நிறுவனம் 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கிடைக்கும் 50% தள்ளுபடிக்கு பிறகு, இந்த ஏசியின் விலை ரூ. 33,990 ஆக குறைந்துள்ளது. இந்த விலையில் புதிய இன்வெர்டர் ஏசி கிடைப்பது அரிதானது. இந்த நேரடி தள்ளுபடிக்கு மேல் சில குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக வங்கி சலுகையும் கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஏசி சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 31,000 விலை வரை வாங்க வாய்ப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டிற்கு புதிதாக ஏசி வாங்க திட்டமிட்டால் இந்த மாடலை கருத்தில் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








