Vodafone விண்ணை தொட்ட சாதனை.. சாதராண 4G, 5G போனில் சாட்டிலைட் வீடியோ காலிங்.. உலகமே வியந்து பார்க்குது..
வோடபோன் (Vodafone) நிறுவனம் 40 வருடங்களுக்கு பிறகு விண்ணை எட்டும் புதிய சாதனத்தை படைத்துள்ளது. இதுவரை எந்தவொரு உலக தொலைத்தொடர்பு நிறுவனமும் (telecom companies) செய்து முடிக்க முடியாத வேலையை, Vodafone செய்து அசத்தியுள்ளது. விண்வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வீடியோ கால் அழைப்பை சாதாரண 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் (4G, 5G smartphone) மூலம் இயக்கிய உலகத்தின் முதல் டெலிகாம் நிறுவனமாக வோடபோன் பெருமையை சேர்த்துள்ளது. இந்த புதிய சேவை மூலம் உலகளவில் உள்ள 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களின் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ஸ்டாண்டர்ட் 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி விண்வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் வீடியோ அழைப்பை (world's first space video call) மேற்கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. மொபைல் கவரேஜ் (mobile coverage) இல்லாத பகுதிகளுக்கு இணைப்பைக் கொண்டுவர செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை தொலைத்தொடர்புடன் இணைக்க உதவும் ஐடியாவில் வோடபோன் வெற்றிபெற்றுள்ளது.

Vodafone விண்ணை தொட்ட சாதனை.. சாதராண 4G, 5G போனில் சாட்டிலைட் வீடியோ காலிங்:
வழக்கமான சாட்டிலைட் சர்வீஸ் இணைப்பில் (satellite service connection) நீங்கள் இணைய உங்களிடம் ஒரு சாட்டிலைட் போன் (satellite phone) இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், உலகத்தில் உள்ள எல்லாரிடமும் சாட்டிலைட் போன் இருப்பதில்லை. குறிப்பாக, பல தொலைத்தொடர்பு சேவைகளே தொட முடியாத இடங்கள் மற்றும் கிராமபுறங்களில் இருக்கும் மக்களிடம் எப்படி சாட்டிலை போன் இருக்க முடியும். அப்படியானால், எல்லோரும் பயன்பெறும் வகையில் ஒரு தீர்வை உருவாக்க வேண்டும் என்று வோடபோன் முடிவு செய்தது.
அந்த ஐடியாவின் படி, வழக்கமான சாட்டிலைட் இணைப்பு போல இல்லாமல், இந்த சேவையை இயக்க உங்களிடம் சாட்டிலை போன் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்கிறது Vodafone. அதேபோல், சிறப்பு முனையங்கள் (special terminals) மற்றும் பெரிய எக்ஸ்டர்னல் டிஷ்கள் (external dish) இருக்க வேண்டும் என்கிற தேவையும் இல்லை. சாட்டிலைட் போன்களுக்கு பதிலாக, உங்களிடம் சாதாரணமான 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனங்கள் இருந்தாலே போதும் என்று வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாதாரண 4G மற்றும் 5G போன்களில் சாட்டிலைட் நெட்வொர்க் சேவை இணைப்பு சாதனை:
சாதாரண போன்களை பயன்படுத்தி, தொலைத்தொடர்பு சேவை இல்லாத இடங்களில் வசிக்கும் மக்கள் கூட டெலிகாம் சேவையுடன் இணையலாம் என்கிறது வோடபோன். இனி மொபைல் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் கூட சாதாரணமான 4ஜி மற்றும் 5ஜி போன்களை பயன்படுத்தி சாட்டிலைட் நெட்வொர்க் இணைப்பு மற்றும் தரை அடிப்படையிலான நெட்வொர்க்குகள் (ground based network) என இரண்டு நெட்வொர்க் சேவைக்கு இடையில் மக்கள் மொபைல் போன்களை பயனப்டுத்தி பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வோடபோனின் புதிய ஸ்பேஸ்-டு-லேண்ட் கேட்வே (space-to-land gateway) AST ஸ்பேஸ்மொபைலின் ப்ளூபேர்டு செயற்கைக்கோள்களால் (AST SpaceMobile's BlueBird satellites) எளிதாக்கப்பட்ட முதல் விண்வெளி அடிப்படையிலான வீடியோ அழைப்பை (first-ever space-based video call) வெற்றிகரமாகப் பெற்று சாதனை படைத்துள்ளது. பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் இருந்து இயங்கும் இந்த செயற்கைக்கோள் சேவை, வோடபோனின் நில அடிப்படையிலான நெட்வொர்க்குகளை விரிவுபடுத்துகிறது.
உலகத்தின் முதல் வோடபோன் சாட்டிலைட் வீடியோ கால் அழைப்பு எங்கிருந்து மேற்கொள்ளப்பட்டது:
இது பல 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக இணைக்கும் ஒரே செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நெட்வொர்க்காக (satellite broadband network) அமைத்து, தொலைத்தொடர்பு சேவையே இல்லாத மலைகள், திறந்த கடல்கள் மற்றும் வேறு எந்த மொபைல் அல்லது நிலையான சேவையும் கிடைக்காத கிராமப்புறங்கள் (villages) போன்ற தொலைதூர இடங்களில் நம்பகமான இணைப்பை பெறுவதை உறுதி செய்துள்ளது.
வோடபோன் நிறுவனம் விண்ணில் இருந்து சாட்டிலைட் உதவியுடன் மேற்கொண்ட அந்த வீடியோ அழைப்பு, வோடபோன் பொறியாளர் ரோவன் செஸ்மர் (Vodafone engineer Rowan Chesmer), இதுவரை மொபைல் பிராட்பேண்ட் அணுகல் இல்லாத வேல்ஸின் நடுப்பகுதியில் உள்ள ஒரு தொலைதூர மலைப் பகுதியிலிருந்து, வோடபோன் குழுமத்தின் தலைமை நிர்வாகி மார்கெரிட்டா டெல்லா வாலேவுக்கு அழைப்பை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 1, 1985 அன்று வோடபோன் இங்கிலாந்தின் முதல் மொபைல் போன் அழைப்பை மேற்கொண்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








