Home
News

ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் நிறுவனங்கள் இன்று அறிவித்த சிறப்பு சலுகைகள்: என்னென்ன வாங்க பார்ப்போம்

வோடபோன் நிறுவனம் ரூ.159 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது.

டெலிகாம் நிறவனங்கள் இன்று பல்வேறு புதிய சலுகைகள் அறிவித்துள்ளன, இருந்தபோதிலும் ஜியோ நிறுவனம் மட்டும் இப்போது எந்தவொரு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய சலுகைகள் ஜியோவிற்கு போட்டியாக தான் உள்ளது.

ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் நிறுவனங்கள் அறிவித்த சிறப்பு சலுகைகள்.!

மேலும் பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ரூ.299 விலையில் கிடைக்கும் புதிய சலுகை பி.எஸ்.என்.எல். சேவையில் இணையும் புது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்துவோருக்கு புது சலுகையை பயன்படுத்த முடியாது.

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

புதிய அறிவிப்பின் படி பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.299 திட்டத்தில் 45ஜிபி டேட்டாவினை நொடிக்கு 8எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்குகிறது, மேலும் இந்த திட்டம் 30 நாட்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது,
அதன்படி தினமுமம் 1.5ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியம். குறிப்பாக இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு புதிய கேஷ்பேக் சலுகைகளையும் அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.23 பீரிப்பெய் ரீசார்ஜ் திட்டம் 28நாட்கள் வரை பயன்படுத்த முடியும், குறிப்பாக இந்த திட்டதில் கால் அழைப்புகளுக்கு 2.5p/sec வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சேவைகளுக்கும் கட்டணம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் ரூ.245 திட்டத்தில் சிறப்பு
சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் நிறுவனம் ரூ.159 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

 டிராய்

டிராய்

மேலும் மாதந்தோறும் குறைந்தபட்ச ரிசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக்கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 3நாட்களுக்கு முன்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும் என்று டிராய் அமைப்பு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone Unveils Rs 159 Prepaid Plan With 1GB Daily Data for 28 Days: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X