Home
News

வோடபோன் அறிவிப்பு: ரூ.176/-க்கு 1ஜிபி/நாள் உடன் வரம்பற்ற வாய்ஸ்.!

இந்த திட்டம் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே "தற்போதுவரை" வோடபோன் அறிவித்துள்ளது.

By Muthuraj

வோடபோன் இந்தியா நாட்டில் மீண்டுமொரு கட்டண யுத்தத்தை தொடங்கியுள்ளது. சமீபத்தில்,இந்த ஆபரேட்டர் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் திட்டத்திகை ரூ.153/-க்கு பஞ்சாபில் வழங்கியது. இன்று, ஒரு புதிய திட்டத்தை ரூ.176/-க்கு அறிவித்துள்ளது.

வோடபோன் அறிவிப்பு: ரூ.176/-க்கு 1ஜிபி/நாள் உடன் வரம்பற்ற வாய்ஸ்.!

இந்த வோடபோன் சூப்பர்பிளானான ரூ.176/- அதன் பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கும். இந்த திட்டம் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே "தற்போதுவரை" வோடபோன் அறிவித்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பிரதேசங்களை மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய மாநிலமாக வோடபோன் கூறுகிறது, ஏழு வெவ்வேறு மாநிலங்களின் எல்லைகளை இது தொடுகிறது. இந்த மாநிலங்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.176/- சூப்பர்பிளானை ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் நாடு முழுவதும் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வோடபோன் அறிவிப்பு: ரூ.176/-க்கு 1ஜிபி/நாள் உடன் வரம்பற்ற வாய்ஸ்.!

வோடபோன் இன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில், இந்த திட்டத்தின் குரல் அழைப்புகளுக்கான எந்த வரம்பையும் குறிப்பிடவில்லை, ஆனால் பெரும்பாலும், குரல் அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்று வரையறுக்கப்படலாம்.

வோடபோன் நிறுவனத்திடமிருந்து, மற்ற வட்டாரங்களில் கிடைக்கும் ஒரு திட்டமான ரூ.181/-ஐ பொறுத்தமட்டில், இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான 2ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

ஆனால் இந்த புதிய ரூ.176/- திட்டத்தில் வரம்பிற்குட்பட்ட ரோமிங் குரல் அழைப்பு நன்மைகள் கிடைப்பதால், இது கூடுதல் நன்மையை வழங்குமொரு திட்டமாகிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வாடிக்கையாளர்களுக்கு, முன்னணி வோடபோன் ஸ்டோர்ஸ், மினி கடைகள் மற்றும் பல பிராண்டு சில்லறை விற்பனை நிறுவனங்களில் இந்த திட்டம் ஏற்கனவே வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone SuperPlan of Rs 176 Announced: Offers Unlimited Voice Calls on Roaming and 1GB 2G Data Per Day for 28 Days. Read more about this in Tamil gizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X