அறிமுகம்: அன்லிமிடெட் வாய்ஸ், 2ஜி வழங்கும் வோடாபோன் ரூ.409 மற்றும் ரூ.459.!

|

வோடாபோன் இந்தியா சமீபத்தில் அதன் 'சூப்பர் பிளான்ஸ்' தொடரின் கீழ் புதிய கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அவைகள் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களுடன் போட்டியிடும் நோக்கில் வெளியாகின.

அறிமுகம்: அன்லிமிடெட் வாய்ஸ், 2ஜி வழங்கும் வோடாபோன் ரூ.409 & ரூ.459.!

வோடாபோன் அதன் சில வட்டங்களில் 200 ரூபாய்க்கும் கீழான சூப்பர் திட்டங்களை அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது அதன் இன்னும் சில அட்டகாசமான சூப்பர் திட்டங்களை தொகுத்து வழங்கியுள்ளது. அவைகள் என்ன திட்டம்.? அவைகளின் விலை நிர்ணயம் என்ன.? அவைகளின் நன்மைகள், செல்லுபடி காலம் மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவைகளை விரிவாக காண்போம்.

நோக்கம்

நோக்கம்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடாபோன், அதன் புதிய திட்டங்களான ரூ.409/- மற்றும் ரூ.459/-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வோடாபோனின் 3ஜி/4ஜி சேவை இல்லாத வட்டாரங்களில் வரம்பற்ற 2ஜி தரவுகளை வழங்குவதே இந்த வோடாபோன் சூப்பர் திட்டத்தின் நோக்கமாகும்.

ரூ.409/- நன்மைகள்

ரூ.409/- நன்மைகள்

வோடாபோன் சூப்பர் திட்டம் ரூ.409/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது உடன் வரம்பற்ற 2 ஜி தரவு, மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை ,மொத்தம் 70 நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ.459/- நன்மைகள்

ரூ.459/- நன்மைகள்

மறுகையில் உள்ள ரூ.459/- ஆனதும் அதே நன்மைகளை (வரம்பற்ற குரல் அழைப்புகள், வரம்பற்ற 2 ஜி தரவு, மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்) கொடுக்கின்றன. ஆனால், இதன் செல்லுபடி காலம்தி சற்று அதிகமாகும் - 84 நாட்களாகும்.

ரூ.359/-க்கும் மற்றும் ரூ.409/-க்கு

ரூ.359/-க்கும் மற்றும் ரூ.409/-க்கு

குறிப்பிடத்தக்க வண்ணம், இந்த திட்டங்கள் ஜம்மு & காஷ்மீர் போன்ற வட்டாரங்களில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் இதே திட்டங்கள் ரூ.359/-க்கும் மற்றும் ரூ.409/-க்கும் கிடைக்கின்றது.

வட்டத்திற்கு வட்டம் விலை மாறுபடுகிறது

வட்டத்திற்கு வட்டம் விலை மாறுபடுகிறது

அறிமுக விலை நிர்ணயத்திலான, அதாவது ரூ.409/- மற்றும் ரூ.459/- திட்டங்களானது ஆந்திரா மற்றும் தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மட்டுமே தற்போது கிடைக்கின்றன. மேற்கூறப்பட்ட வட்டாரங்களானது வோடாபோன் நிறுவனத்தின் 3ஜி அல்லது 4ஜி சேவைகள் சரியான முறையில் கிடைக்கப்பெறாத இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் மற்ற வட்டாரங்களில்

விரைவில் மற்ற வட்டாரங்களில்

இந்த இரண்டு புதிய திட்டங்களும் நிறுவனத்தால் அமைதியான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இவைகள் மிக விரைவில் மற்ற வட்டாரங்களையும் வந்தடையுமென்று எதிர்பார்க்கலாம். இந்த அதிகாரபூர்வமற்ற திட்டங்களுடன் ரூ.176/- என்கிற அதிகாரபூர்வ வோடபோன் சூப்பர் திட்டமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.176/- நன்மைகள்

ரூ.176/- நன்மைகள்

ரூ.176/- திட்டத்தின் நன்மைகள் பொறுத்தமட்டில், இதுவும் வரம்பற்ற 2 ஜி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

இது 4ஜி யுகம்

இது 4ஜி யுகம்

இந்தியாவின் 2ஜி சகாப்தம் இன்னும் முளுமையாக முடிந்துவிடாத நிலைப்பாட்டில், 3ஜி மற்றும் 4ஜி சேவைகள் எட்டமுடியாத இடங்களை மனதிற்கொண்டு உருவாக்கம் பெற்றுள்ள இந்த திட்டங்கள் ஒரு சிறப்பான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை. மறுகையில் இது 4ஜி யுகம் என்பதையும் வோடாபோன் மறந்து விடக்கூடாது.

Best Mobiles in India

English summary
Vodafone Super Plans of Rs 409, and Rs 459 Introduced With Unlimited Voice Calls, 2G Data, and 100 SMS Per Day. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X