இது வேறயா.. 6 மாசத்துக்கு ரூ.45.. இந்தாங்க உங்க SIM, நீங்களே வச்சிக்கோங்க.. கடுப்பாகும் Vodafone கஸ்டமர்ஸ்!
இன்னும் 1 மாதத்தில் 2026 ஆம் ஆண்டே வரப்போகிறது. ஆனால் நாமெல்லாம் என்னவோ 10 ஆண்டுகள் பின்னோக்கி இருப்பது போல.. வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது இன்னமும் கூட "ஒரு குறிப்பிட்ட சேவைக்காக" கட்டணம் வசூலிக்கும் ஒரே ஒரு டெலிகாம் கம்பெனி ஆக உள்ளது!
அந்த சேவை எம்சிஏ (MCA) என்கிற மிஸ்டு கால் அலர்ட்ஸ் சேவையாகும். இப்போதைக்கு மிஸ்டு கால் அலர்ட்ஸ் சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் ஒரே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது. அதாவது பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாக வழங்குகின்றன.

ஆனால் வோடாபோன் ஐடியாவோ எம்சிஏ சேவைக்கென ஒரு பிரத்யேக பேக்கை கொண்டுள்ளது. அந்த எம்சிஏ பேக்கின் விலை ரூ.45 ஆகும். இது 6 மாத வேலிடிட்டி உடன் வருகிறது. மிஸ்டு கால் அலர்ட்கள் என்பது ஒரு அடிப்படையான தொலைத்தொடர்பு அம்சமாகும். இது சந்தாதாரர்கள் தங்கள் மொபைல் போன் அணைக்கப்பட்டிருந்தாலோ அல்லது கவரேஜுக்கு வெளியே இருந்தாலோ அல்லது தொடர்பு கொள்ள முடியாதிருந்தாலோ அவர்கள் தவறவிட்டிருக்கக்கூடிய அழைப்புகளை பற்றி தெரிவிக்கும் ஒரு அம்சமாகும்
ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்களுமே தத்தம் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு எம்சிஏ சேவையை இலவசமாக வழங்கினாலும் கூட, வி நிறுவனம் இந்த சேவையை கூடுதல் கட்டண சேவையாகவே பட்டியலிடுகிறது. கடந்த பல ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் இந்த ஆபரேட்டரின் எம்சிஏ பேக் ஆனது தனியார் துறையில் எஞ்சியிருக்கும் சில கட்டண எம்சிஏ திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ஒவ்வொரு ரூபாயும் முக்கியம்: வி நிறுவனமானது கடன் சுமைகள் காரணமாக சிரமப்பட்டு வருகிறது. இந்த கடன், பெரும்பாலும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue - AGR) பாக்கிகளை உள்ளடக்கியது. டெலிகாம்டால்க் வலைத்தளத்தின் அறிக்கையின்படி - இது ரூ.80,000 கோடிக்கு மேல் செல்கிறது.
இந்திய அரசாங்கம் வி நிறுவனத்தின் ஏஜிஆர் நிலுவை தொகையை தீர்த்து வைக்க முடிந்தால், அது வி நிறுவனத்திற்கு கிடைக்கும் நிதிகளுக்கான கதவுகளை திறக்கக்கூடும். மேலும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் பங்கு முதலீட்டாளர்களை பெறவும் அனுமதிக்கும். சமீபத்தில் 2016-17 தொடர்பான ஏஜிஆர் நிலுவை தொகையை கேட்கும் முடிவை இந்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வோடாபோன் ஐடியாவின் ரீசார்ஜ் விலை உயர்வு: இம்மாத தொடக்கத்தில் வோடாபோன் ஐடியா நிறுவனமானது வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்சலுகைகளை வழங்கும் அதன் வருடாந்திர திட்டங்களில் ஒன்றின் விலையை அதிகரித்தும் இங்கே குறிப்பிடத்தக்கது. அது ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs.1999) ஆகும். தற்போது இது கூடுதல் சலுகைகளுடன் ரூ.2,249 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது (அல்லது) திருத்தப்பட்டு உள்ளது.
வோடபோன் ஐடியா ரூ.2,249 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புதிய ரூ.2,249 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் (நீங்கள் இருக்கும் வட்டத்தை பொறுத்து) 30 ஜிபி அல்லது 40 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
மேலும் ரூ.1999 இல் இருந்ததை போலவே டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா பயன்பாட்டிற்கு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திருத்தத்திற்கு பிறகு, திட்டத்தின் பயனுள்ள செலவு இப்போது ஒரு நாளைக்கு சுமார் ரூ.6.16 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழ்நாடு, சென்னை, ஆந்திரப் பிரதேசம், பீகார் டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, மத்திய பிரதேசம், மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், , உ.பி கிழக்கு, உ.பி மேற்கு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வட்டங்களில் ரூ.2249-ன் கீழ் 30 ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








