Home
News

அறிமுகம்: வோடாபோனின் "போட்டித்தன்மைமிக்க" ரூ.153/- திட்டம்.!

ரூ.153/- என்ற விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகமாகியுள்ள இந்த புதிய கட்டண திட்டத்தின் நன்மைகள் என்ன மற்றும் இதன் செல்லுபடி காலம் என்ன.?

By Muthuraj

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு இயக்குநரான வோடபோன், ஒரு கவர்ச்சிகரமான கட்டண திட்டத்தை அமைதியாக அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண திட்டங்களுக்கு மட்டுமின்றி பிரதான போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களுக்கும் கடும் போட்டியாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அறிமுகம்: வோடாபோனின்

ரூ.153/- என்ற விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகமாகியுள்ள இந்த புதிய கட்டண திட்டத்தின் நன்மைகள் என்ன மற்றும் இதன் செல்லுபடி காலம் என்ன.? முக்கியமாக இந்த ரூ.153/- ஆனது, எந்தெந்த திட்டங்களை பின்தள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதை விரிவாக காண்போம்.

1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி

1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி

இந்த புதிய ரூ.153/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது. சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் ரூ.198/- என்கிற கட்டணத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டமும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான தரவுகளை வழங்குகிறது.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்

தவிர, ஐடியா செல்லுலார் நிறுவனமானதும் அதன் ரூ.197/- என்கிற திட்டத்தின் கீழ், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் நாள் ஒன்றிக்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. முதலில், ஏர்டெல் தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது, பின்னர் ஐடியா செல்லுலர் இந்த பட்டியலில் இணைந்தது, இப்போது, ​​வோடபோன் இந்தியாவும் இணைந்துள்ளது.

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

இந்த புதிய ரூ.153/- ஆனது ரூ.199/- என்ற குரல் மற்றும் தரவுத் திட்டத்திலிருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்த திட்டம் தற்போது பஞ்சாப் மாநிலத்திலுள்ள வோடாபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் மற்ற வட்டாரங்களில் இந்த திட்டம் எப்போது அறிவிக்கப்படும் என்பது சார்ந்த வார்த்தைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு வட்டாரத்திலும் செல்லுபடியாகவில்லை

எந்தவொரு வட்டாரத்திலும் செல்லுபடியாகவில்லை

"ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தில்லி போன்ற பிற வட்டாரங்களில் இந்த திட்டத்தின் கிடைக்கும் தன்மையை நாங்கள் சரிபார்த்தோம். ஆனால் இந்த திட்டம் எந்தவொரு வட்டாரத்திலும் செல்லுபடியாகவில்லை" என்று டெலிகாம்டால்க்.இன்ஃபோ குறிப்பிட்டுள்ளது.

தமிழ் நாட்டில்..

தமிழ் நாட்டில்..

மறுகையில், வோடபோன் அதன் அனைத்து ஐந்து சூப்பர் பிளான்களையும், திறந்தவெளி திட்டங்களாக தமிழ் நாட்டில் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கிடைக்கும் வோடபோனின் ஐந்து சூப்பர் திட்டங்களின் பட்டியல் : ரூ.79, ரூ.199, ரூ.347, ரூ.458 மற்றும் ரூ.509/- திட்டங்கள்.

ரோமிங் உட்பட வரம்பற்ற அழிப்பு நன்மைகள்

ரோமிங் உட்பட வரம்பற்ற அழிப்பு நன்மைகள்

வோடபோன் வழங்கும் சூப்பர் திட்டங்களில் ஒன்றாக ரூ.199/-ன் நன்மைகளை பொருத்தமட்டிலும் 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா, ரோமிங் உட்பட வரம்பற்ற அழிப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் ஒன்றுக்கு 25 பைசா என மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இன்று சந்தையில் கிடைக்கும் சிறந்த திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை.

மூலம்: டெலிகாம்டால்க்.இன்ஃபோ

Best Mobiles in India

English summary
Data War: Vodafone Started Offering 1GB Data Per Day for 28 Days at Just Rs 153. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X