வோடாஃபோன் இண்டர்நெட் பேக் கட்டணம் குறைப்பு!
ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடாஃபோன் நிறுவனமும் டேட்டா சேவைக் கட்டணங்களை குறைத்திருக்கின்றது. இந்த விலை குறைப்பு 2ஜி, 3ஜி, மற்றும் 4ஜி சேவைகளுக்குப் பொருந்தும். வோடாஃபோன் டேட்டா சேவை கட்டணங்கள் சுமார் 67 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

கட்டணம்
அதன் படி குறைக்கப்பட்ட டேட்டா கட்டணங்களின் படி ரூ.650 க்கு 3ஜிபி 3ஜி / 4ஜி வழங்கப்பட்டது, இனி 5 ஜிபி வரை வழங்கப்படும் என வோடாஃபோன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைப்பு
இதே போல் ரூ.499 டேட்டா பேக் மூலம் 2 ஜிபி 3ஜி / 4ஜி வழங்கப்பட்ட நிலையில் இனி 3 ஜிபி வரை கிடைக்கும், மேலும் ரூ.999 3ஜி / 4ஜி பேக் இனி 10 ஜிபி டேட்டா பெற முடியும். இது 54 சதவீதம் அதிகம் ஆகும்.

இண்டர்நெட்
முதல் முறை இண்டர்நெட் பயன்படுத்துவோர் மற்றும் குறைந்த அளவு இண்டர்நெட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் பயனுள்ளதாக இருக்கும் என வோடாஃபோன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை
டேட்டா சேவை கட்டணங்கள் ஒவ்வொரு நகரத்திற்கும் மாறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வோடாஃபோன் சலுகை அறிவிப்பு ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்களைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

ஜியோ
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தனது சேவைகளை விரைவில் வழங்க இருப்பதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் இண்டர்நெட் சேவைக்கான கட்டணங்களைக் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications