அதிக நன்மைகளை வழங்கும் வோடபோன்: ஏர்டெலுக்கு வந்த சத்திய சோதனை.!

|

ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவால், இந்திய தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்ட கட்டண யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் அனுதினமும் தங்களது திட்டங்களை புதுப்பித்து கொண்டே உள்ளன. மறுகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் தொகுத்து வழங்குகின்றன.

அதிக நன்மைகளை வழங்கும் வோடபோன்: ஏர்டெலுக்கு வந்த சத்திய சோதனை.!

அதிலும் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ஆக்கிரோஷமான விலைக் குறைப்புகளைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டு வருகின்றன.

ஒரே மாதிரியான விலையில் பிரிமியம் சேவைகள்

ஒரே மாதிரியான விலையில் பிரிமியம் சேவைகள்

பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் எட்டு பட்ஜெட் திட்டங்களை எச்எஸ்பிஎன் அனிமேஷன் சேவை மூலம் வழங்குகிறது. அதன் கீழ் கிடைக்கும் - ரூ.399, ரூ.499, ரூ.649, ரூ.799, ரூ.1199, ரூ.1,999 மற்றும் ரூ.2,999 - அனைத்து திட்டங்களும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் மாத தரவுப் பயன்பாட்டிற்கான மாறுபட்ட தரவு பொதிகளுடன் வந்துள்ளன.

எதை தேர்வு செய்வது.? எது சிறந்தது.?

எதை தேர்வு செய்வது.? எது சிறந்தது.?

மறுகையில் வோடாபோன் நிறுவனமானதும் ரூ.499/- தொடங்கி ரூ.2,999/- என்ற வரம்பு வரையிலான அதன் புதிய ரெட் டிராவலர் திட்டங்களை தொகுத்து வழங்கி வருகிறது. இந்த இரண்டு ஆப்ரேட்டர்களும் ஒரேமாதிரியான விலையில் வழங்கும் பிரிமியம் சேவைகளில் எதை தேர்வு செய்வது.? எது சிறந்தது.? என்ற குழப்பம் உங்களிடம் இருந்தால் - வோடாபோனின் ரூ.2,999/- திட்டமே முன்னிலை வகிக்கிறது.

ஏர்டெல் மைபிளான் இன்பினிட்டி 2999

ஏர்டெல் மைபிளான் இன்பினிட்டி 2999

ஏர்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய பிரீமியம் திட்டமான இன்பினிட்டி ரூ.2,999/- ஆனது, ஒரு மாதத்திற்கான உள்ளூர் மற்றும் எல்டிடி மற்றும் வரம்புக்குட்பட்ட தேசிய ரோமிங்கிற்கான வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. தரவு நன்மைகளை பொறுத்தமட்டில், இது தினசரி பயன்பாட்டு வரம்புகள் இல்லாமல் மாதத்திற்கு 200ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

ஏகப்பட்ட இலவச சந்தாக்கள்

ஏகப்பட்ட இலவச சந்தாக்கள்

நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும் இந்த திட்டம் டேட்டா ரோலர் சேவையாகும். அதாவது இந்த மாதம் நீங்கள் பயன்படுத்தப்படாத தரவை, அடுத்த மாத கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியும். எனினும், ஒரு கணக்குக்கு அதிகபட்சமாக 500ஜிபி வரம்பிற்கு இந்த டேட்டா ரோலர் சேவை உட்பட்டுள்ளது.

இலவச ஏர்டெல் செக்யூர் சந்தா

இலவச ஏர்டெல் செக்யூர் சந்தா

மேலும் இந்த திட்டத்தின் கேள் வின்க் ம்யூசிக் மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவைகளுக்கான இலவச சந்தாவும் கிடைக்கும். இந்த போஸ்ட்பெயிட் திட்டமானது, நிறுவனத்தின் சாதன பாதுகாப்பு சேவைக்கான இலவச ஏர்டெல் செக்யூர் சந்தாவையும் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரெட் சிக்னேசர் திட்டம்

வோடபோன் ரெட் சிக்னேசர் திட்டம்

வோடபோன் நிறுவனத்தின் பிரீமியம் திட்டமான இது ஏர்டெல் நிறுவனத்தின் பிரீமியம் திட்டத்தின் அதே விலை (ரூ.2999) நிர்ணயத்தை கொண்டுள்ளது. ஏர்டெல் திட்டங்களைப் போலவே, வோடபோனின் இந்த திட்டமானது வரம்பற்ற தேசிய அழைப்பு, வெளியே செல்லும் ரோமிங், இலவச எஸ்எம்எஸ் மற்றும் 200 ஜிபி அளவிலான டேட்டா ஆகியவைகளை ஒரு மாதத்திற்கு வழங்குகிறது.

கூடுதலாக 200 சர்வதேச அழைப்பு நிமிடங்கள்

கூடுதலாக 200 சர்வதேச அழைப்பு நிமிடங்கள்

வோடபோன் நிறுவனமும் டேட்டா ரோல்ஓவர் சேவையை வழங்குவதால், பயன்படுத்தாத 500ஜிபி அளவிலான டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு நகர்த்த முடியும். இந்த நன்மைகளையெல்லாம் தவிர்த்து, வோடபோனின் ரூ.2,999/- திட்டமானது கூடுதலாக 200 சர்வதேச அழைப்பு நிமிடங்களை வழங்குகிறது.

பில்லிங் சுழற்சிக்கு 100 எஸ்எம்எஸ்

பில்லிங் சுழற்சிக்கு 100 எஸ்எம்எஸ்

இந்த திட்டத்தின் கீழ் உள்ளூர் / எஸ்டிடிடி அழைப்புகளுக்கு வரம்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உடன் வோடபோன் ப்ளே, மஜ்ஜ்ட்டர், நெட்ஃபிக்ஸ், வோடபோன் ரெட் ஷீல்ட் மற்றும் ஒரு பில்லிங் சுழற்சிக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற பிரத்யேக சேவைகளுக்கான சந்தாவும் இதன் கீழ் கிடைக்கிறது.

தீர்ப்பு - எது பெஸ்ட்.?

தீர்ப்பு - எது பெஸ்ட்.?

மேற்கண்ட நன்மைகளில் இருந்தே தெளிவாக, வோடபோனின் ரெட் சிக்னேச்சர் தான் ஏர்டெல் வழங்கும் நன்மைகளை விட சிறந்தது என்பது புரிந்திருக்கும். குறிப்பாக வோடபோன் வழங்கும் 200 நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்பு நன்மையானது ஏர்டெல் அதன் பிரீமியம் சேவையில் சேர்க்கவில்லை. மேலும், வோடபோன் அதன் போஸ்ட்பெயிட் சந்தாதாரர்களுக்கு நெட்ஃபிக்ஸ் இலவச சந்தாவை வழங்குகிறது. இது ஏர்டெல் திட்டத்தை பின்தள்ளும் மற்றொரு கூடுதல் நன்மையாகும்.

20% தள்ளுபடி

20% தள்ளுபடி

இரண்டு நிறுவனங்களுமே, குடும்ப உறுப்பினர்களை திட்டத்தில் சேர்க்கும் போது 20% தள்ளுபடியை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு காரணத்தினால் ஏர்டெல் நிறுவனத்தின் இன்பினிட்டி திட்டமானது சிறப்பானதாகிவிடாது. இந்த குறிப்பிட்ட திட்டத்தை தவிர்த்து பார்த்தால், பார்தி ஏர்டெல் தான் நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக திகழ்கிறது மற்றும் மிகப்பெரிய பாதுகாப்புடன் நம்பகமான வலையமைப்பையும் வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Vodafone’s Rs 2,999 RED Signature Postpaid Plan is a Worthy Alternative to Airtel’s Rs 2,999 myPlan Infinity Postpaid Plan. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X