ஜியோவிற்கு சமமாக வோடாபோன் ரூ.299/- அறிமுகம்; ஆனால் ஒரு பின்னடைவு.!
இருப்பினும் இந்த வோடாபோன் ரூ.299/- ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299/ என்கிற ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒப்பிடும் போது, ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குகிறது.
வோடாபோன் இந்தியா நிறுவனமானது அதன் ரூ.299/- திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டமானது வோடபோன் நிறுவனத்தின் மற்ற வட்டங்களில் கிடைக்கும்படி 3ஜி அல்லது 4ஜி டேட்டாவை வழங்காது, 2ஜி டேட்டா வழங்குகிறது என்று என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த வோடாபோன் ரூ.299/- ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299/ என்கிற ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒப்பிடும் போது, ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குகிறது.

நாள் ஒன்றிற்கு 1 ஜிபி
நன்மைகளை பொறுத்தமட்டில், வோடபோன் ரூ.299/- ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் (தினசரி / வார வரம்பை கொண்ட) சேர்த்து, நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவு மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.

வோடாபோன் 4ஜி கவரேஜ்
தற்போது வரையிலாக, இந்த திட்டமானது மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் மிக விரைவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள வோடபோன் பயனாளர்களுக்கும், மோசமான வோடாபோன் 4ஜி கவரேஜ் உள்ள வட்டாரங்களிலும் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு
இந்த திட்டத்தின் மொத்த நன்மைகளைப் பற்றி பேசுகையில் 56ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது இந்த திட்டம் ரூ.56 நாட்கள் செல்லுபடியாகும் என்று அர்த்தம். ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கினாலும் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்கிற வரம்பை கொண்டுள்ளது.

84 நாட்களுக்கும் செல்லுபடி
அதே வட்டத்தில் வோடாபோன் ரூ.459, ரூ.409, ரூ.349/- மற்றும் ரூ.176/- ஆகிய திட்டங்களும் கிடைக்கிறது. இந்த முதல் 3 திட்டங்களும் ரூ.299/- வழங்கும் அதே நன்மைகளை வெவ்வேறு செல்லுபடியை கொண்டுள்ளது. உதாரணமாக, வோடாபோன் ரூ.459/- ஆனது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும், ரூ.409/- ஆனது 84 நாட்களுக்கும் செல்லுபடியாகும்.


ரூ.176/- ரீசார்ஜ்
இறுதியாக ரூ.176/- என்கிற கட்டணத் திட்டமானது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் மற்றும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications