Home
News

குறைந்த விலையில் 1ஜிபி டேட்டா-அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்- 28நாட்களுக்கு: வோடபோன் அசத்தல்.!

இதற்கு முன்பு வோடபோன் ரூ.169 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்பட்டது.

வோடபோன் நிறவனம் நேற்று இரண்டு திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்த நிலையில், இன்று குறைந்த விலையில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
கண்டிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கும்.

குறைந்த விலையில் 1ஜிபி டேட்டா-இலவச வாய்ஸ் கால்- 28நாட்களுக்கு: வோடபோன்

இதற்கு முன்பு வோடபோன் ரூ.169 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே
ஆப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.119 திட்டம்:

வோடபோன் ரூ.119 திட்டம்:

இப்போது வோடபோன் ரூ.169 திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகையே ரூ.119 திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதாவது வோடபோன் ரூ.119 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு இந்நிறுவனம் அறிவித்த சிறப்பு சலுகை மற்றும் திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து
ரசிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Rs. 119 Recharge Plan Debuts With 1GB Data, Unlimited Voice Calls for 28 Days: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X