வோடபோன்: 90ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்.!
வோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் இந்த வாரம் மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் தற்சமயம் போஸ்ட்பெயிட் வாடிக்கையளர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதுவும், நீண்ட நாட்களுக்கு பிறகு.

வோடபோன் ரெட் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் ரூ.649 என்ற போஸ்ட்பெயட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்
மற்றும் அன்லிமிட்டெட் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பின்பு டேட்டா பலன்களை பொறுத்தவரை மாதம் 90ஜிபி டேட்டா மற்றும் 200ஜிபி வரை டேட்டா ரோல்ஒவர் சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 12 மாங்களுக்கான வோடபோன் பிளே சந்தாவும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு பயனர்கள் நேரலையில் டிவி மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியும்.
அதேபோல் இந்த புதியு திட்டத்தை தேர்வு செய்வோர் ஐபோன் ஃபார்எவர் சலுகையையும் பெறமுடியும், இதன் மூலம் ஐபோனை தவறுதலாக கீழே போடும் போது ஏற்படும் சேதத்தை சிர செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்டசம் ரூ.15,000 வரையிலான தொகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் ஐபோன் ஃபார்எவர் சலுகையில் ஐபோனினை சரி செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ ரூ.2000 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டியிருக்கும். மேலும் வோடபோன் இதற்கு முன்பு அறிமுகம் செய்த பிரீபெயட்ட திட்டங்களைப் பார்போம்.

வோடபோன் ரூ.351 திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.351 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 100எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித
கட்டுப்பாடும் இன்றி 56 நாட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித டேட்டத பலன்களும்வழங்கப்படவில்லை என்பதால், டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை தேர்வு செய்ய வேண்டும் என
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.1,999 திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந் திட்டத்தை 365நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.1,699-திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும்
திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

வோடபோன் ரூ.479 திட்டம்:
வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

வோடபோன் ரூ.209 திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ரூ.119 திட்டம்:
வோடபோன் ரூ.119 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








