Home
News

வோடபோனின் ரூ.509 திட்டத்தில் கூடுதல் டேட்டா அறிவிப்பு.!

வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல், ஏர்டெல் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் வோடபோன் நிறுவனமும் தனது ரூ.509 திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ளது, மேலும் இந்த சலுகை பல்வேறு
மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

வோடபோனின் ரூ.509 திட்டத்தில் கூடுதல் டேட்டா அறிவிப்பு.!

வோடபோன் நிறுவனத்தின் ரூ.509 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 90நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்தது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.509 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி
1.5ஜிபி டேட்டா வீதம் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ், கால் அழைப்புகள்,ரோமிங் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.351 திட்டம்:

வோடபோன் ரூ.351 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.351 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 100எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி 56 நாட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித டேட்டத பலன்களும்வழங்கப்படவில்லை என்பதால், டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை தேர்வு செய்ய வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.1,999 திட்டம்:

வோடபோன் ரூ.1,999 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந் திட்டத்தை 365நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து
ரசிக்கலாம்.

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

 வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ரூ.119 திட்டம்:

வோடபோன் ரூ.119 திட்டம்:

வோடபோன் ரூ.119 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Rs 509 prepaid plan revised to offer 9GB additional data : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X