ஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்!
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.448-திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தை 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் ஜியோ நிறவனத்திற்கு போட்டியா வோடபோன் அதன் ரூ.458/- திட்டதில் கூடுதல் டேட்டா நன்மைகளை அறிவித்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்பு வோடபோன் நிறுவனம் ரூ.199-திட்டதில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்தது, இப்போது ரூ.458-திட்டதில் கூடுதல் டேட்டாவை அறிப்பதன் மூலம் ஜியோவிற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தியுள்ளது இந்த வோடபோன் நிறுவனம்.மேலும் வோடபோன் இப்போது அறிவித்துள்ள திட்டத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.458/-திட்டம்:
வோடபோன் வழங்கும் ரூ.458/-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இப்போது தினசரி 2.8ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், எஸ்எஸ்எம் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு இதே திட்டதில் தினசரி 1.4ஜிபி டேட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.448-திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தை 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.448 மற்றும் ரூ.449 திட்டத்தில் தினசரி 2ஜிபி மற்றும் 1.5ஜிப டேட்டா ஆஃபர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. பின்பு ரூ.448-திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும், அதேபோல் ரூ.449-திட்டத்தை 91-நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலவச வாய்ஸ்கால் மற்றும்
எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

78.4ஜிபி டேட்டா:
வோடபோன் நிறுவனம் இதற்குமுன்புரூ.199-/ திட்டத்தில் 78.4ஜிபி டேட்டா சலுகை அறித்தது, மேலும் தினசரி 2.8ஜிபி டேட்டாஇ 100எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 28 நாட்களுக்கு இந்த திட்டத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டாரங்களில் மட்டுமே இந்த சிறப்பு சலுகை கிடைக்கும் என்று வோடபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வட்டாரங்களிலும் இந்த அட்டகாசமான சிறப்பு சலுகை கிடைக்கும் என வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications