ஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.349/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்!
இதேபோன்று ஜியோ நிறுவனம் ரூ.299/- என்ற திட்டத்ததை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி விதம் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து ஏர்டெல், ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் தற்சமயம் ரூ.349/- என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது வோடபோன் நிறுவனம். மேலும் இந்த திட்டம் பல்வேறு வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் நிறுவனம் இப்போது ரூ.349/-ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று வோடபோன் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோனின் ரூ.349/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மற்ற சலுகைகள் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது,அதன்படி இந்த திட்டத்தில் இலவச எஸ்டிடி மற்றும் லோக்கல் கால் அழைப்கள், ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை பெற முடியும் என வோடபோன் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஜியோ நிறுவனம் ரூ.299/- என்ற திட்டத்ததை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி விதம் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.299/- திட்டத்தில் குறிப்பாக இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த அருமையான ஜியோ திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது
ஏர்டெல் நிறுவனமும் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி வீதம் 4ஜி டேட்டாவை வழங்குககிறது, குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை வெறும் 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

வோடபோன் ரூ.569/-திட்டத்தில் தினசரி 3ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்ததை 84 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாட்டு அளவுடன் வழங்கப்படுகிறது.

வோடபோன் அறிமுகம் செய்த ரு.511/-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் தினமும் 100எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என வோடபோன் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications