Home
News

வெறுப்பேத்தும் Jio-க்கு வெடி? வெறும் ரூ.23-க்கு புது ரீசார்ஜ் அறிமுகம்! உண்மையாவே இது Vodafone கம்பெனி தானா!

இன்னும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யவில்லை என்கிற ஒரே காரணத்தினால் விஐ என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) கஸ்டமர்களை.. ஜியோவும், ஏர்டெல்லும் போட்டிபோட்டுக்கொண்டு பறித்து வருகின்றன. நிதி சிக்கல்கள் காரணமாக வோடாபோனால் உடனடி 5ஜி அறிமுகத்தை நிகழ்த்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது!

இந்நிலைப்பாட்டில் வோடாபோனால் செய்ய முடியும் ஒரே பதிலடி என்றால், அது கஸ்டமர்களை ஈர்க்கும் விலையில் புதிய ரீசார்ஜ்களை அறிமுகம் செய்வது மட்டுமே ஆகும். அப்படியான ஒரு வேலையை தான் வோடபோன் பார்த்துள்ளது. வெறும் ரூ.23க்கு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.

வெறும் ரூ.23-க்கு புதிய Vodafone ரீசார்ஜ் அறிமுகம்!

வோடபோன் ஐடியாவின் இந்த புதிய ரூ.23 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி என்ன? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்களிடம் இதேபோன்ற திட்டங்கள் இல்லையா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான விடைகள் இதோ:

வோடபோன் ஐடியா ரூ.23 ரீசார்ஜின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆப்ரேட்டரின் இந்த புதிய ப்ரீபெயிட் ரீசார்ஜ் (New Prepaid Recharge) ஆனது உண்மையில் ஒரு டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும். அதாவது டேட்டா நன்மையை மட்டுமே வழங்குமொரு திட்டமாகும்.

வெறும் ரூ.23-க்கு புதிய Vodafone ரீசார்ஜ் அறிமுகம்!

மற்ற டேட்டா வவுச்சர்களை போலவே இதுவும் கூட ஆக்டிவ் பேஸ் பிளான் (Active Base Plan) இல்லாமல் வேலை செய்யாது. அதாவது உங்களிடம் அடிப்படை ரீசார்ஜ் எதுவும் இல்லை என்றால் ரூ.23 டேட்டா வவுச்சரை உங்களால் பயன்படுத்த முடியாது என்று அர்த்தம்.

இந்த டேட்டா வவுச்சர் 1.2ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் இது 1 நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இது ஒரு சுவாரஸ்யமான திட்டமாகும். ஏனெனில் ரூ.19 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்றொரு வோடபோன் டேட்டா வவுச்சர் ஆனது 24 மணிநேரத்திற்கு (அதாவது 1 நாளுக்கு) 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

வெறும் ரூ.23-க்கு புதிய Vodafone ரீசார்ஜ் அறிமுகம்!

ஒருவேளை உங்களுக்கு 1ஜிபி க்கு மேலாக 200எம்பி கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், நீங்கள் ரூ.19-ஐ ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக ரூ.23 திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தின் பலன் நள்ளிரவு 12 மணிக்கு காலாவதியாகும் என்று வோடபோன் ஐடியா குறிப்பிட்டுள்ளது. அதாவது பயன்படுத்தப்படாத டேட்டா ஏதேனும் இருந்தால், அது நள்ளிரவிற்கு பின் மறைந்துவிடும்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வோடபோன் ஐடியாவிடம் ரூ.24 மதிப்பிலான டேட்டா ப்ரீபெய்ட் வவுச்சரும் உள்ளது. ஆனால் இந்த திட்டம் ட்ரூ அன்லிமிடெட் டேட்டாவுடன் (Truly unlimited data) வருகிறது. இருப்பினும் இதன் வேலிடிட்டி வெறும் 1 மணிநேரம் மட்டுமே ஆகும்.

அதாவது ரூ.24 டேட்டா வவுச்சர் மூலம் ஒரு மணிநேரத்திற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் (Limit) இருக்காது. ஒருவேளை 5ஜிபி-க்கு மேலான டேட்டா நன்மையை வழங்கும் வோடபோன் ஐடியா டேட்டா வவுச்சரை நீங்கள் தேடினால் ரூ.49 ரீசார்ஜை கருத்தில் கொள்ளலாம்.

ரூ.49 ரீசார்ஜ் ஆனது 6ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் இதன் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும், அதாவது இது 24 மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். சுவாரசியமாக ஏர்டெல் நிறுவனமும் கூட இதே விலையில், இதே போன்ற நன்மைகளை வழங்கும் ஒரு திட்டத்தை தன்வசம் கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவை பொறுத்தவரை, ரூ.15க்கு 1ஜிபி டேட்டா, ரூ.19க்கு 1.5ஜிபி டேட்டா, ரூ.25க்கு 2ஜிபி டேட்டா, ரூ.29க்கு 2.5ஜிபி டேட்டா, ரூ.61க்கு 6ஜிபி டேட்டாவை வழங்கும் மலிவு-விலை டேட்டா பூஸ்டர்களை கொண்டுள்ளது. ஆனால் இவைகள் அனைத்திற்குமே தனிப்பட்ட வேலிடிட்டி எதுவும் கிடையாது. எல்லாமே ஆக்டிவ் பேஸ் பிளானின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்.

நாம் மேற்கண்ட எல்லாம் திட்டங்களுமே பான்-இந்தியா அடிப்படையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அதாவது இந்தியா முழுவதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. விருப்பப்பட்ட டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்ய விரும்பும் வோடபோன், ஜியோ மற்றும் ஏர்டெல் கஸ்டமர்கள் தத்தம் நிறுவனங்களின் ஆப் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Rs 23 Plan Validity Benefits All You Need To Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X