கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்த வோடபோன் நிறுவனம்.!
வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது.
ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து வோடபோன் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை
வோடபோன் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் வோடபோன் நிறுவனம் ரூ.209 மற்றும் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ளது,கண்டிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தாள் கூறவேண்டும்.

வோடபோன் ரூ.209 திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ரூ.479 திட்டம்:
வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம்
இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும். மேலும் வோடபோன் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.1,699-திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி
வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக
இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும்
வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

டாப் அப் ரீசார்ஜ் திட்டம் ரூ.50:
வோடபோன் இன் ரூ.50 திட்டத்திற்கு ரூ.39.97 டாக் டைம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களின் டாக் டைம் இல் ஏதேனும் பேலன்ஸ் மிச்சமிருந்தால் நீங்கள் செய்யும் அடுத்த ரீசார்ஜ் உடன் உங்களின் பேலன்ஸ் டாக் டைம் சேர்த்துக்கொள்ளப்படும்.

டாப் அப் ரீசார்ஜ் திட்டம் ரூ.100:
வோடபோன் இன் ரூ.100 திட்டத்திற்கு ரூ.100 முழு டாக் டைம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் செய்யும் அடுத்த ரீசார்ஜ் உடன் உங்களின் முந்தைய பேலன்ஸ் டாக் டைம் சேர்த்துக்கொள்ளப்படும்.

டாப் அப் ரீசார்ஜ் திட்டம் ரூ.500:
வோடபோன் இன் ரூ.500 திட்டத்திற்கு ரூ.100 முழு டாக் டைம் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் திட்டத்தில் முழு டாக் டைம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








