Home
News

மலிவு விலையில் வோடபோன் அறிமுகம் செய்த இரண்டு திட்டங்கள்.! முழுவிவரம்.!

வோடபோன் நிறுவனம் கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக செய்திகள் வெளியானது, அதேசமயம் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் கடந்த சில மாதங்களை அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

 தொடர்ந்து வோடபோன் நிறுவனம் பல்வேறு

இதை தொடர்ந்து வோடபோன் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்நிறுவனம் மலிவு விலையில் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வோடபோன் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்ய திட்டங்களின் விலை ரூ.109 மற்றும் ரூ.169 ஆகும்.

டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.109

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.109 மற்றும் ரூ.169 திட்டங்கள் ஆனது 20நாட்கள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இந்த திட்டங்கள் றுவனத்தின் இணையதளத்தில் நேரலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 வலைத்தளத்தின்படி ரூ.109-விலையில் அறிமுகமான ப்ரீபெய்ட்

இந்நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி ரூ.109-விலையில் அறிமுகமான ப்ரீபெய்ட் திட்டமானது 20நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது, பின்பு 1ஜிபி டேட்டா, 300எஸ்எம்எஸ் மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு வரம்பற்ற அழைப்பு வசதி ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் Zee5 மற்றும் வோடபோன் ப்ளே சந்தாவும் இதில் அடங்கும்.

 இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.169-

அடுத்து இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.169-திட்டம் ஆனது, தினசரி 1ஜிபி டேட்டா,100எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளிட்ட நன்மைகளை 20நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் வோடபோன் ப்ளே மற்றும் ஒரு ஜீ 5 சந்தா போன்ற நன்மைகளும் இதில் அடங்கும்.

வோடபோன் ரூ.46 விலையில் புதிய

இதுதவிர வோடபோன் ரூ.46 விலையில் புதிய வவுச்சரையும் அறிமுகம் செய்துள்ளது. தற்போது, ​​இந்த வவுச்சர் கேரள வட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த திட்டம் ஆனது அதே நெட்வொர்க்கில் அழைப்பதற்கு 100 நிமிடங்களையும் வழங்குகிறது, அதே நேரத்தில் மற்ற ஆபரேட்டர்களுக்கான அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ.2.5 பைசா வசூல் செய்கிறது. இந்த திட்டம் ஐடியா மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் 14 நாட்களுக்கு ரூ.24 வவுச்சரையும் வழங்குகிறது, இது அழைப்பதற்கு 100 நிமிடங்களை வழங்குகிறது.

 பயன்படும் வகையில்

அதே சமயம் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் ரூ.819 திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக வோடபோன் ரூ.819 திட்டம் டெல்லியில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Launches Rs. 109 And Rs. 169 Prepaid Packs; Offering Unlimited Calling For 20 Days: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X