வோடபோன் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம்அறிமுகம்: எவ்வளவு நாள் வேலிடிட்டி தெரியுமா?
வோடபோன் வழங்கும் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 28ஜிபி டேட்டா கிடைக்கிறது.
வோடபோன் நிறுவனம் தற்சமயம் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியா ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த புதிய திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான்
கூறவேண்டும்.

வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ரோமிங் போன்ற சலுகை வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்பு வோடபோன் அறிவித்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்:
வோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சேவைகள் 28நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டேட்டா நன்மைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வோடபோன் ரூ.109 திட்டம்:
வோடபோன் ரூ.109 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சேவைகள் 28நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டம்:
வோடபோன் வழங்கும் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 28ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டதில் இலவச கால் அழைப்பு வசதி மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.209 திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வோடபோன் ரூ.479 திட்டம்:
வோடபோன் வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126ஜிபி டேட்டா இந்த திட்ட்தில் கிடைக்கிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.529 திட்டம்:
வோடபோனின் ரூ.529 திட்டத்தில் தினசரி 1.5டேட்டா வீதம் 90 நாட்கள் பயன்படுத்த முடியும்,மொத்தமாக இந்த திட்டத்தில் 135ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் தினசரி 300எஸ்எம்எஸ் மற்றம் இலவச கால் அழைப்புகள் போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications