வோடபோன் புதிய பாக்கெட் சேவிங் ரூ47 ப்ரீபெய்ட் பிளான்.!
வோடபோன், இந்தத் திட்டத்தை அடிப்படை பயனர்களை மனதில் வைத்து வழங்கியிருக்க வேண்டும். ஜியோபோன் ரூ49 திட்டம் வோடபோனின் இந்தத் திட்டத்தை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது
இந்திய வோடபோன் நிறுவனம் தனது புதிய அதிரடி ப்ரீபெய்ட் பிளான் ரூ47-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரூ47 ப்ரீபெய்ட் பிளானின் சலுகையாக 7500 வினாடிகள் வாய்ஸ் காலிங் மற்றும் 500 எம்பி டேட்டாவுடன் 50 இலவச எஸ்எம்எஸ் என 28 நாட்களுக்கு வெலிடிட்டி வழங்குகிறது. வோடாபோனின் முந்தைய ஒரு வாரம், 10 நாட்கள் வேலிடிட்டி ப்ரீபெய்ட் பிளான்களுக்கு பதிலாகத் தனது டேரிஃப் பிளானின் அதிரடி மாற்றமாக ஒரு மாத வேலிடிட்டி சேவையாகக் கொண்டுவந்துள்ளது.
இதுவரை ரூ50 கீழ் ஒரு சில மாதாந்திரத் திட்டங்களை நாங்கள் பார்த்துள்ளோம். அனைத்துத் திட்டங்களிலும் சிறந்த மாதாந்திர திட்டமாக ரிலையன்ஸ் ஜியோ-வின் ரூ49 பிளான் ஜியோ வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வோடபோன்
வோடபோன் தனது புதிய ரூ47 திட்டத்துடன் 7500 விநாடிகளில் வாய்ஸ் காலிங்கை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏறக்குறைய 125 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் அழைப்புகளைச் செய்ய முடியும். இத்துடன் வோடபோன் உள்ளூர் / எஸ்டிடி / தேசிய ரோமிங் விநாடிகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மற்ற நன்மைகளாக 500 எம்பி 2G / 3G / 4G டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு 50 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் இருப்பு கட்டண கழித்தல் வழியாக மட்டுமே செயல்படுத்தப்படும்.

25 மில்லியன்
வோடபோன், இந்தத் திட்டத்தை அடிப்படை பயனர்களை மனதில் வைத்து வழங்கியிருக்க வேண்டும். ஜியோபோன் ரூ49 திட்டம் வோடபோனின் இந்தத் திட்டத்தை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது. ஜியோ 4G தரவரிசையில் 1 ஜிபி டேட்டாவுடன் எப்யுபி(FUP) வரம்பின்றி 28 நாட்களுக்கு 50 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற வாய்ஸ் அழைப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் 25 மில்லியன் ஜியோபோன் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வோடபோன் திட்டமானது அதன் அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரெட் போஸ்ட்பெய்டு
சமீப காலங்களில், முன்வந்த மற்றும் பிந்தைய கட்டண திருத்தத்திற்கு பிறகு வோடபோன் சூப்பர் ஆக்டிவாக உள்ளது. வோடபோன் ரெட் போஸ்ட்பெய்டு திட்டங்களை இன்னும் அதிரடியாக மாற்றிய பிறகு, வோடபோனின் கவனம் ப்ரீபெய்ட் பயனர்கள் நோக்கி திரும்பியுள்ளது.

டெல்கோ(telco)
சமீபத்தில் டெல்கோ(telco) நிறுவனம் ரூ199, ரூ399, ரூ458 மற்றும் ரூ509 ரூபாய்களுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமைத் திட்டங்களை வழங்கியுள்ளது. இந்த கட்டண நிலையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அடுத்து வோடபோன் என்ன சுவாரசியமான திட்டத்தைக் கொண்டு வரப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications