Home
News

வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.! கடுப்பில் ஜியோ.!

ஜியோ நிறுவனம் அன்மையில் இலவச அழைப்புகள் கிடையாது எனக் கூறிஇ நமிடத்திற்கு 6பைசா என்கிற கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து பல்வேறு மக்கள் ஜியோ-வை விமர்ச்சித்து வருகின்றனர்.

 28நாட்கள் வேலிடிட்டி

28நாட்கள் வேலிடிட்டி

இந்நிலையில் எரிகிற தீயில் மேலும் எண்ணெயை ஊற்றுவது போல, ஜியோவிற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம்தனது ரூ.30 பீரிபெய்ட் திட்டத்தில் குரல் அழைப்பு உள்ளிட்ட சலுகையுடன் 28நாட்கள் வேலிடிட்டி அறிவித்துள்ளது.

ரூ.30-ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.30-ப்ரீபெய்ட் திட்டம்

டெலிகாம் டாக் வலைதளம் அறிவிப்பின்படி வோடாபோன் வாடிக்கையாளர்கள் ரூ.30ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ்செய்தால் 28நாட்கள் வரை டால்க் டைம் பெறமுடியும் என அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் மும்பை, கேரளா மற்றும்
கர்நாடக வட்டங்களில் மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 ரூ.45-திட்டம்

ரூ.45-திட்டம்

மேலும் வோடாபோன் நிறுவனம் இதற்முன்பு அறிவித்த ரூ.45-திட்டம் ஆனது 100எம்பி 4ஜி/3ஜி/2ஜிபி டேட்டா வசதியுடன்28நாட்கள் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் வினாடிக்கு ஒரு பைசாவில் குரல் அழைப்பை வழங்குகிறது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

அன்மையில் ஜியோ நிறுவனம் ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களைத் தான் நீக்கியுள்ளது. குறிப்பாக ரூ.19சாசெட் பேக் என்று கூறப்படும் திட்டம் ஆனது ஒரே ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். பின்பு ரூ.52 திட்டமானது மொத்தம் ஏழு நாட்களுக்கு செல்லுபடியை கொண்டது ஆகும்.

 காம்போ திட்டங்கள்

காம்போ திட்டங்கள்

ஜியோ இப்போது ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களை நீக்கிவிட்டதால், பயனர்களுக்கான காம்போ திட்டங்கள் ஆனது ரூ.98-ல் தொடங்குகிறது. இந்த 98ரூபாய் திட்டமானது 28நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும்.

ரூ.19-திட்டமானது

இப்போது நீக்கப்பட்ட ரூ.19-திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், 150எம்பி அளிவிலான 4ஜி டேட்டா மற்றும் 20எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை ஒரு நாள் என்கிற செல்லுபடியாகும் நன்மைகளில் வழங்கப்பட்டது.

ல் ரூ.52-திட்டமானது

அதேபோல் ரூ.52-திட்டமானது 1.05ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 70எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை ஏழு நாட்கள் செல்லுபடியாகும் காலத்தி;ன் கீழ் வழங்கியது. குறிப்பாக இந்த 52ரூபாய் திட்டமானது JioTV, JioCinema, JioSaavn போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Vodafone rolls out Rs 30 prepaid plan with full talk time for 28 days: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X