முதலில் ஏர்டெல், இப்போது வோடபோன் - ஜியோவை "வச்சி செய்யும்" திட்டம்.!

|

வோடபோன் நிறுவனம் அதன் ரூ.348/- ப்ரீபெய்ட் திட்டத்தில் சில அட்டகாசமான திருத்தங்களை நிகழ்த்தியுள்ளது. இதை நிச்சயமாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.

முதலில் ஏர்டெல், இப்போது வோடபோன் - ஜியோவை

கடந்த ஆகஸ்ட் அறிமுகமான இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்கி வந்தது. பின்னர் ஆகஸ்ட் மாதம் கழிந்து வோடாபோனின் ரூ.348/- ஆனது, நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது. இந்த திட்டம் வழங்கும் நன்மைகளின் முழுமையான விவரங்கள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

உள்ளூர், வெளியூர் மற்றும் தேசிய ரோமிங்

உள்ளூர், வெளியூர் மற்றும் தேசிய ரோமிங்

முதலில் ரூ.348/- பேக் ஆனது வட்டத்திற்கு ஏற்றபடி சற்று மாறுபட்ட விலைகளில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நன்மைகளை பொருத்தமட்டில்- உள்ளூர், வெளியூர் மற்றும் தேசிய ரோமிங் ஆகியவைகளுக்கான வரம்பற்ற இலவச அழைப்பு நன்மையை வழங்குகிறது.

மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டா

மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டா

மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம் மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். ஜியோவின் ஆதிக்கத்தில் இருந்து வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் வெளியானபல்வேறு டெலிகாம் நிறுவனங்களின் புதிய திட்டங்களில் இதுவொரு சமீபத்திய இணைப்பாகும்.

இலவச ரோமிங் வெளிச்செல்லும் அழைப்புகள்

இலவச ரோமிங் வெளிச்செல்லும் அழைப்புகள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த புதிய ரூ.348/- திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் மற்றும் 28 நாட்களுக்கான இலவச ரோமிங் வெளிச்செல்லும் அழைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுருந்தாலும் இலவச அழைப்பு நன்மைகளின் மீதான வரம்பை கொண்டிருக்கிறது

5 சதவிகித கேஷ்பேக்

5 சதவிகித கேஷ்பேக்

அதாவது நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்ற வரம்பை கொண்டுள்ளது. இந்த வரம்பை மீறிய பின்னர் ஒரு நொடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தை வோடபோன் ஆப் அல்லது வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்ய 5 சதவிகித கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

நேரடியாக போட்டி

நேரடியாக போட்டி

இந்த வோடபோன் பேக் ஆனது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- பேக் உடன் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது. தவிர இலவச அழைப்புகள் (வெளிச்செல்லுதல் உட்பட) மற்றும் நாள் ஒன்றிருக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.309/- நன்மைகள்

ஜியோவின் ரூ.309/- நன்மைகள்

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் ரூ.309/- ஆனது, நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான டேட்டா என மொத்தம் 49 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் ரூ.309/- திட்டமானது இலவச அழைப்புகள், 3,000 எஸ்எம்எஸ், ரோமிங் வெளிச்செல்லும் அழைப்புகள் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.

வோடபோனின் ரூ.176/- நன்மைகள்

வோடபோனின் ரூ.176/- நன்மைகள்

வோடபோனின் மற்றொரு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டமான ரூ.176/- ஆனது 1ஜிபி அளவிலான 2ஜி டேட்டாவை ஒரு மாத காலம் செல்லுப்படியாகும் வண்ணம் வழங்குகிறது, உடன் வரம்பற்ற அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. இதன் வரம்பு நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Vodafone Revises Rs. 348 Pack, Offers 2GB Data Per Day and Unlimited Calling. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X