ரூ.198-ல் திருத்தம்: ஒருவழியாக தார்மீக தந்திரத்தை கையாண்டுள்ள வோடா.!
இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட டெலிகாம் நிறுவனமான வோடபோனும் பின்பற்ற தொடங்கியுள்ளது. அதாவது நிறுவனத்தின் சில வட்டாரங்களில் ரூ.198/- என்கிற கட்டண திட்டத்தை மறுசீரமைத்துள்ளது.
இறுதியாக, வோடபோன் இந்தியா நிறுவனமும் "கட்டண திருத்தம்" என்கிற தார்மீக இந்திய டெலிகாம் துறை தந்திரத்தை கையாளத்தொடங்கியுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக அனுதினமும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியாத நிலைப்பாட்டை அடைந்த இதர இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கண்டறிந்த ஒரு திறன்மிகுந்த வழிதான் - கட்டண திருத்தம்.

அந்த வழியை இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட டெலிகாம் நிறுவனமான வோடபோனும் பின்பற்ற தொடங்கியுள்ளது. அதாவது நிறுவனத்தின் சில வட்டாரங்களில் ரூ.198/- என்கிற கட்டண திட்டத்தை மறுசீரமைத்துள்ளது. அதென்ன திருத்தம்.? இனி இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

போட்டியிடும் முனைப்பாக
இனி வோடாபோனின் ரூ.198/- ஆனது நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வரம்பற்ற கட்டண திட்டங்களுடன் போட்டியிடும் முனைப்பாக இந்த திட்டம் திருத்தம் கண்டுள்ளது.

39.2 ஜிபி என்று உயர்ந்துள்ளது
வோடாபோனின் ரூ.198/- திட்டத்தின் செல்லுபடி காலமானது 28 நாட்கள் ஆகும். ஆக இந்த திட்டத்தின் கீழ் மொத்த தரவு நன்மையானது 39.2 ஜிபி என்று உயர்ந்துள்ளது. இருப்பினும் கூட முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் 56 ஜிபி டேட்டாவை விட குறைவாகவே உள்ளது.


விரைவில்
குறிப்பிட்டபடி, இந்த வோடபோன் திருத்தமானது மும்பை போன்ற சில வட்டாரங்களில் மட்டுமே தற்போதைக்கு கிடைக்கிறது. மேலும் அனைத்து வட்டங்களிலும் இதே மாற்றத்தை விரைவில் ஏற்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்
தற்போது மும்பையில் உள்ள வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.198/- என்கிற கட்டண திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி தரவு, வரம்பிற்குட்பட்ட குரல் அழைப்புகள் மற்றும் 100 நாள் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் அனுபவிக்க முடியும்.

தினசரி மற்றும் மாதாந்திர
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவைப் போல் அல்லாமல், வோடபோன் நிறுவனமானது அதன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையில் தினசரி மற்றும் மாதாந்திர வரம்பை கொண்டுள்ளது. அதாவது வாரத்திற்கு 1000 நிமிடங்களுக்கு மேல் (உள்ளூர் + எஸ்டிடி) பயன்படுத்த முடியாது.

இரண்டாவது நாளிலேயே
அந்த வரம்பை தாண்டினால் ரூ.198/- ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் நொடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் இரண்டாவது நாளிலேயே 1000 நிமிடங்கள் உபயோகித்து விட்டால்,அடுத்த ஐந்து நாட்களுக்கும் அவர் கட்டணம் செலுத்த வேண்டும்.

வினாடிக்கு ஒரு பைசா
தினசரி வரம்பை பொறுத்தமட்டில், 250 நிமிடங்களுக்கும் அதிகமாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நொடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல ஒரு வாரத்தில் 300க்கும் மேற்பட்ட தனிப்பட்ட எண்களை அழைக்கும் வாடிக்கையாளர்களும் வினாடிக்கு ஒரு பைசா என்ற கட்டணம் வசூலிக்கப்படும்.

மறுபரிசீலனை செய்யவில்லை
கடந்த இரு வாரங்களாக பல டெலிகாம் நிறுவனங்கள் அதன் பிரபல திட்டங்களில் அதிரடியான திருத்தங்களை நிகழ்த்தி வரும் நிலைப்பட்டில், வோடபோன் இந்தியா அதன் ரூ.509 மற்றும் ரூ.459/- என்கிற இரண்டு நீண்ட கால திட்டங்களில் எந்தவிதமான மறுபரிசீலனையும் செய்யவில்லை என்பதும் வருத்தம். மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications