வோடபோனின் தரமான திட்டம் மீது ரூ100 விலையேற்றம்.! என்ன திட்டம்?
தற்சமயம் வோடபோன் நிறுவனம் அதன் பிரீமியம் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் ரென்டல் விலையை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் RED தொடரின் கீழ் கிடைக்கும் மிகவும் பிரபலமான போஸ்ட்பெய்ட் திட்டமான Vodafone RedX தற்போது ரூ.1,099-க்கு அணுக கிடைக்கிறது.

இதற்கு முன்பு இந்த திட்டத்தின் விலை ரூ.999-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திட்டம் தோராயாமாக10சதவீத விலை உயர்வை, அதாவது ரூ.100என்கிற விலை உயர்வைப் பெற்றுள்ளது.

இந்த வோடபோன் ரெட்எக்ஸ் திட்டம் தான் நிறுவனத்தின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட் போர்ட்ஃபோலியாவில் மிகவும் விலை உயர்ந்த திட்டம் ஆகும. நன்மைகளை பொறுத்தவரை வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தேசிய ரோமிங், மாதத்திற்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது.

இதுதவிர ஒரு வருட நெட்ஃபிக்ஸ் சலுகை, தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஒய்வகங்களுக்கான அணுகல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு சிறப்பு விலையின் கீழ் ஐ.எஸ்.டி அழைப்புகள் போன்ற கூடுதல் நன்மைகளுக்கும் கிடைக்கும்.

ஆனால் வோடபோனின் ரெட்எக்ஸ் திட்டத்தின் அதிகரித்த விலையானது புதிய சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்துமா அல்லது ஏற்னவே சேவையில் இருக்கும் சந்தாதாரர்களுக்கு பொருந்துமா என்பதில் குழப்பம் நீட்டிக்கிறது.

மேலும் வோடபோன் ஐடியா லிமிடெட் சமீபத்தில் ஐடியா நிர்வாணா போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இருந்த அதன் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள் அனைவரையும் வோடபோன் ரெட் பேனரின் கீழ் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் நிறுவனம் அன்மையில் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் மட்டும் இரட்டை தரவு (Double Data Offer)சலுகையை அறிவித்துள்ளதுஅதைப் பற்றிய விரிவானத் தகவல்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.299-திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.299-ப்ரீபெய்ட் திட்டத்தில் இரட்டை தரவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 2ஜிபி டேட்டா நன்மையுடன் இப்போது அறிவித்துள்ள 2ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன் இந்த திட்டம் கிடைக்கும். மொத்தமாக 4ஜிபி டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் நீங்கள் வரம்பற்ற
அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிர, இந்த தரவுத் திட்டத்துடன் Zee5 மற்றும் வோடபோன் ப்ளே பிரீமியம் பயன்பாட்டின் இலவச சந்தாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம்.

வோடபோன் ரூ.449-திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தில் இரட்டை தரவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 2ஜிபி டேட்டா நன்மையுடன் இப்போது அறிவித்துள்ள 2ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன் இந்த திட்டம் கிடைக்கும். மொத்தமாக 4ஜிபி டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் நீங்கள் வரம்பற்ற
அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிர, இந்த தரவுத் திட்டத்துடன் Zee5 மற்றும் வோடபோன் ப்ளே பிரீமியம் பயன்பாட்டின் இலவச சந்தாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு 56நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம்.

வோடபோன் ரூ.699-திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.699-ப்ரீபெய்ட் திட்டத்தில் இரட்டை தரவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 2ஜிபி டேட்டா நன்மையுடன் இப்போது அறிவித்துள்ள 2ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன் இந்த திட்டம் கிடைக்கும். மொத்தமாக 4ஜிபி டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் நீங்கள் வரம்பற்ற
அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிர, இந்த தரவுத் திட்டத்துடன்Zee5மற்றும் வோடபோன் ப்ளே பிரீமியம் பயன்பாட்டின்இலவச சந்தாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு 84நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம்.

வோடபோன் ரூ.399-திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.399-திட்டத்திலும் இரட்டை தரவு நன்மை வழங்கப்பட்டுள்ளது, அதன்படி ஏற்கனவே 1.5ஜிபி டேட்டா நன்மையுடன் இப்போது அறிவித்துள்ள 1.5ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன் இந்த திட்டம் கிடைக்கும். மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் மலும் இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் நீங்கள் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிரஇ இந்த தரவுத் திட்டத்துடன் Zee5 மற்றும் வோடபோன் ப்ளே பிரீமியம் பயன்பாட்டின் இலவச சந்தாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு 56நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம்.


Click it and Unblock the Notifications








