வோடபோனின் ரூ.399/-ல் திருத்தம்: ரூ.4000/-வரை சலுகைகள்.!
உடன் வோடாபோன் பிளே சேவை வழியாக ரூ.4000/- மதிப்பிலான திரைப்படங்களுக்கான இலவச அணுகல் மற்றும் 4 மாதங்களுக்கு 3,500 இ-மேகசின்களின் பரந்த தொகுப்பை வழங்கும் மேக்ஸ்டர் சந்தா தொகுப்பு கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய பெரு நிறுவனங்களை சமாளிக்கும் வண்ணம் வோடபோன் இந்தியா அதன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கான ரூ.399/- ரெட் கட்டண திட்டத்தில் திருத்தம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

இனி இந்த வோடபோன் ரூ.399/- திட்டமானது வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், தேசிய ரோமிங், 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளுடன் 30 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை மாதந்தோறும் வழங்கும், உடன் 200ஜிபி அளவிலான டேட்டாவை ரோல் ஓவர், அதாவது அடுத்த பில்லிங் சுழற்சிக்கு கொண்டு செல்லும் வாய்ப்பையும் இந்த திட்டத்தின்கீழ் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.4000/- மதிப்பிலான திரைப்படங்களுக்கான இலவச அணுகல்
உடன் வோடாபோன் பிளே சேவை வழியாக ரூ.4000/- மதிப்பிலான திரைப்படங்களுக்கான இலவச அணுகல் மற்றும் 4 மாதங்களுக்கு 3,500 இ-மேகசின்களின் பரந்த தொகுப்பை வழங்கும் மேக்ஸ்டர் சந்தா தொகுப்பும் கிடைக்கும்.

1,000 நிமிடங்கள் என்ற வரம்பு
நிறுவனத்தின் பிற திட்டங்கள் மற்றும் பொதிகளைப் போலவே, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மையானது நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் என்ற வரம்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஷீல்ட்
இந்த திட்டத்தில் வோடபோன் ரெட் ஷீல்ட் தொகுப்பும் அடங்கும், இது உங்கள் ஸ்மார்ட்போன் சேதம் மற்றும் திருட்டு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதாக நிறுவனத்தின் வழியாக கூறப்படும் ஒரு சாதன காப்பீட்டு திட்டமாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆரம்பத்தில், வோடபோன் ரெட் சந்தாதாரர்கள் இந்த ரூ.399/- திட்டத்தை ரீசார்ஜ் செய்ய அவர்களது மொபைலில் இருந்து 199 என்கிற எண்ணை டயல் வேண்டும். பின்னர் இந்த திட்டம் நாட்டில் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டு வோடபோன் தளத்தில் அப்டேட் செய்யப்பட்டது.

எங்கெல்லாம் கிடைக்காது.?
இருப்பினும் இந்த திட்டமானது ஆந்திரா, மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட், ஜம்மு, காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் வட்டாரங்களில் தற்போது வரையிலாக கிடைக்கவில்லை.


முதலில் 10ஜிபி
கடந்த நவம்பரில் அறிமுகமான இந்த ரூ.399/- திட்டமானது வரம்பற்ற உள்ளூர் மற்றும் எல்டிடி அழைப்புக்கள் மற்றும் இலவச உள்வரும் தேசிய ரோமிங், 10ஜிபி தரவு மற்றும் டேட்டா ரோல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications
