வோடபோன் ரெட் பிளானில் வரம்பற்ற காலிங், 3 மடங்கு அதிக தரவு.!
பிஎஸ்என்எல், ஐடியா நிறுவனத்தை தொடர்ந்து வோடாபோன் அதன் பங்கிற்கு ஒரு சூப்பர் சலுகையை களமிறக்கியுள்ளது.
தொலைத்தொடர்பு சலுகைகளை விரும்பும் மக்களுக்கு இன்று ஒரு நல்ல நாள் என்றே தெரிகிறது. ஒருபக்கம் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.149/- புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய, ஐடியா நிறுவனமோ ப்ளிப் கார்ட் உடன் இணைந்து 1ஜிபி விலையில் 15ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கி கொண்டிருக்கிறது. மறுபக்கம் வோடாபோன் அதன் பங்கிற்கு ஒரு சூப்பர் சலுகையை களமிறக்கியுள்ளது.
வோடபோன் அதன் ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்களின் கீழ் வரம்பற்ற காலிங் மற்றும் 3 முறை அதிகமான 4ஜி தரவு ஆகியவைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை மற்றும் அதற்கான நன்மைகள் பற்றிய விரிவான தொகுப்பே இது.

ரெட் பிளான் சலுகை
ரூ.499/-ல் இருந்து தொடங்கும் இந்த வோடபோன் ரெட் பிளான் சலுகையில் கீழ் ப்ரீபெயிட் வடிக்கையாளர்களுக்கான வரம்பற்ற காலிங் வசதி உடன் சேர்த்து கூடுதல் தரவு வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

ரூ.499/-
எடுத்துக்காட்டாக இந்த வோடபோன் ரெட் பிளான் ரூ.499/-ன் கீழ், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற காலிங் வசதி, இலவச தேசிய ரோமிங், 100 உள்ளூர் தேசிய எஸ்எம்எஸ் அத்துடன் 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு 3ஜிபி டேட்டாவும், 4ஜி அல்லாத ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.

ரூ.699/
இதேபோல், ரெட் பிளான்களான ரூ.699/-ன் கீழ் 4ஜி மொபைல் பயனர்களுக்கு 5ஜிபி தரவும் (4ஜி அல்லாதவர்களுக்கு 2.5ஜிபி டேட்டாவும்) உடன் வரம்பற்ற காலிங் வசதி மற்றும் இலவச தேசிய ரோமிங் மற்றும் 100 உள்ளூர் தேசிய எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இப்படியாக வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்கள் ரூ.999/-, ரூ.1,299/-, ரூ.1,699/- மற்றும் ரூ.1,999/- என்ற ரீசார்ஜ்களில் கிடைக்கின்றன.

ரூ.1,999/-
ரூ.1,999/-ன் கீழ் 4ஜி அல்லாத சாதனங்களுக்கு 20ஜிபி மற்றும் 4ஜி சாதனங்களுக்கு 24 ஜிபி தரவு உடன் வரம்பற்ற அழைப்பு, இலவச தேசிய ரோமிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும். உடன் இந்த சலுகைகளின் விலை வட்டாரங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது பொருந்தாது
உடன் இந்த திட்டங்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா, பீகார் மற்றும் ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆகிய இடங்களில் தற்போது பொருந்தாது என்றும் வோடபோன் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
கேலக்ஸி நோட் 7 வெடிப்பு : அதிகாரப்பூர்வ காரணத்தை அறிவித்த சாம்சங்.!


Click it and Unblock the Notifications








