2 அதிரடி திட்டங்கள் அறிமுகம்; நீங்கள் வோடாபோனிற்கு மாறினாலும் ஆச்சரியமில்லை.!
இந்த புதிய வோடாபோன் திட்டங்கள் ரூ.458 மற்றும் ரூ.509/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோவை சமாளிக்கும் வண்ணம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் கூடுதல் தரவுகளுடன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை வோடாபோன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வோடாபோன் திட்டங்கள் ரூ.458 மற்றும் ரூ.509/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு ஒரு ஜிபி அளவிலான டேட்டா ஆகிய நன்மைகள் வழங்குமென நிறுவனம் அறிவித்துள்ளது. வோடாபோனின் இதே மாதிரியான நன்மைகளை வழங்கும் திட்டங்கள் வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடிகும் நிலைப்பாட்டில் இவைகள் நீண்ட கால திட்டங்களாக வெளிவந்துள்ளன.

மொத்தம் 84ஜிபி
முதலாவதாக, வோடாபோனின் புதிய ரூ.509/- திட்டமானது அனைத்து ப்ரீபெய்ட் பயனர்களுக்கும் கிடைக்கும். இந்த வோடபோன் திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகளுடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்களுக்கு செல்லுப்படியாகும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 84ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம்.

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் வெளியான விவரங்களை படி, இந்த வோடபோன் திட்டமென்பது இந்தியாவில் எந்தவொரு நெட்வார்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்கும். இருப்பினும், இந்த வோடாபோன் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் என்ற வரம்பை கொண்டுள்ளது.

வோடாபோன் ப்ளே இலவச சந்தா
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வோடாபோன் ப்ளே இலவச சந்தாவையும் வாடிக்கையாளர்கள் அணுகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தினசரி வரம்பான 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா தீர்ந்த பின்னர் இணையத்தின் வேகம் குறைக்கப்படும்.

மொத்தம் 70ஜிபி
இரண்டாவதாக, வோடாபோனின் புதிய ரூ.458/- திட்டமானது, ரூ.509/- திட்டத்தை போலவே அனைத்து ப்ரீபெய்ட் பயனர்களுக்கும் கிடைக்கும். இந்த வோடாபோன் திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகளுடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. 70 நாட்களுக்கு செல்லுப்படியாகும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம்70ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம்.

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் வெளியான விவரங்களை படி, இந்த வோடாபோன் திட்டமென்பது இந்தியாவில் எந்தவொரு நெட்வார்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்கும். இருப்பினும், இந்த வோடாபோன் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் என்ற வரம்பை கொண்டுள்ளது.

ஜியோ மீதான நேரடியாக தாக்குதல்
இந்த திட்டத்தின் கீழும் வோடாபோன் ப்ளே இலவச சந்தாவை வாடிக்கையாளர்கள் அணுகலாம். இந்த இரண்டு திட்டங்களுமே, ஜியோவின் ரூ.459/- (84 நாள் செல்லுபடி) மற்றும் ரூ.399/- (70 நாட்கள் செல்லுடி) திட்டங்களை நேரடியாக தாக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமே இல்லை.!


Click it and Unblock the Notifications