Home
News

சைக்கிள் கேப்புல கிடா வெட்டிய Vodafone Idea.. IPL 2025 க்காக 6 திட்டங்கள் அறிவிப்பு.. இதோ லிஸ்ட்!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களை போலவே, வோடாபோன் ஐடியா நிறுவனமும் கூட, ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா சேர்க்கப்பட்டுள்ள திட்டங்களை அறிவித்துள்ளது. அதென்ன திட்டங்கள்? இதோ விவரங்கள்:

01. வோடாபோன் ஐடியா ரூ.101 டேட்டா பிளான் (Vodafone Idea Rs 101 Data plan): விஐ-யின் ரூ.101 திட்டத்தின் கீழ் 5 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் மற்றும் 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்.

Vodafone Idea: IPL 2025 க்காக 6 திட்டங்கள் அறிவிப்பு!

02. வோடாபோன் ஐடியா ரூ.239 பிளான் (Vodafone Idea Rs 239 Plan): விஐ-யின் ரூ.239 திட்டத்தின் கீழ் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 28 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்

03. வோடாபோன் ஐடியா ரூ.399 பிளான் (Vodafone Idea Rs 399 Plan): விஐ-யின் ரூ.399 திட்டத்தின் கீழ் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 1 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்

04. வோடாபோன் ஐடியா ரூ.469 பிளான் (Vodafone Idea Rs 469 Plan): விஐ-யின் ரூ.469 திட்டத்தின் கீழ் டெய்லி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 3 மாதங்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்

05. வோடாபோன் ஐடியா ரூ.994 பிளான் (Vodafone Idea Rs 994 Plan): விஐ-யின் ரூ.994 திட்டத்தின் கீழ் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 3 மாதங்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்

06. வோடாபோன் ஐடியா ரூ.3699 பிளான் (Vodafone Idea Rs 3699 Plan): விஐ-யின் ரூ.3699 திட்டத்தின் கீழ் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 1 ஆண்டுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்

இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா உடன் வரும் ஏர்டெல் திட்டங்களின் விவரங்கள்:
1. ஏர்டெல் ரூ.195 டேட்டா பிளான் (Airtel Rs 195 Data Plan)
2. ஏர்டெல் ரூ.100 டேட்டா பிளான் (Airtel Rs 100 Data Plan)
3. ஏர்டெல் ரூ.3999 பிளான் (Airtel Rs 3999 Plan)

4. ஏர்டெல் ரூ.1199 பிளான் (Airtel Rs 1199 Plan)
5. ஏர்டெல் ரூ.549 பிளான் (Airtel Rs 549 Plan)
6. ஏர்டெல் ரூ.1029 பிளான் (Airtel Rs 1029 Plan)
7. ஏர்டெல் ரூ.398 பிளான் (Airtel Rs 398 Plan)
8. ஏர்டெல் ரூ.301 பிளான் (Airtel Rs 301 Plan)

இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா உடன் வரும் ஜியோ திட்டங்களின் விவரங்கள்: ஜியோ நிறுவனம் அதன் ரூ.100 டேட்டா பிளான் மற்றும் ரூ.195 டேட்டா பிளான் வழியாக இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. இதனுடன் சேர்த்து ஜியோ அன்லிமிடெட் என்கிற புதிய ஆபரின் (Reliance Jio Unlimited Offer) கீழ் ரூ.299 மற்றும் அதற்கு மேலான விலையில் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவையும் வழங்குகிறது.

FAQs
ஐபிஎல் 2025 எப்போது முடிவடையும்?

ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி வரை நடக்க உள்ளன.

எந்தெந்த டெலிகாம் நிறுவனநாள் ஜியோஹாட்ஸ்டார் இலவச சந்தாவை வழங்குகின்றன?

பிஎஸ்என்எல் நிறுவனத்தை தவிர்த்து இந்தியாவின் மற்ற 3 டெலிகாம் நிறுவனங்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) தத்தம் பல திட்டங்களின் கீழ் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகின்றன.

ஜியோஹாட்ஸ்டார் என்றால் என்ன?

ஜியோஹாட்ஸ்டார் என்பது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைப்பின் விளைவாக உருவான ஒரு ஸ்ட்ரீமிங் தளமாகும். இது விளையாட்டு, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல கன்டென்ட்களை ஒரே சந்தாவின் கீழ் வழங்குகிறது.

GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Prepaid Plans Which Helps To Get Free JioHotstar Subscription And Watch IPL 2025 Live
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X