இனி வோடாபோன் பிளே ஆப்பில் 300 லைவ் சேனல்கள்; பெறுவது எப்படி.?
மேலும் இந்த வீடியோக்கள் பிராந்திய மொழிகளிலும் இருக்கின்றது என்பது கூடுதல் தகவல்.
வோடோபோன் இந்தியா நிறுவனம் சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கடும் போட்டியை சந்தித்து வரும் நிலையில் தற்போது பிரிட்டனை சேர்ந்த இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச ஸ்க்ரீமிங் வீடியோக்களை வரும் ஜூன் 30 வரை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோக்கள் பிராந்திய மொழிகளிலும் இருக்கின்றது என்பது கூடுதல் தகவல்.
வோடோபோன் பிளே தற்போது பிராந்திய மொழிகளான தமிழ், போஜ்புரி, தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி ஆகிய வீடியோக்கள் மற்றும் ஏராளமான ஹாலிவுட் பிராந்திய மொழி டப்பிங் திரைப்படங்கள் என 5000க்கும் அதிகமான இலவச வீடியோக்களை வழங்கவுள்ளது. மேலும் இந்த நிறுவனம் லைவ் டிவி செயலியையும் 300க்கும் அதிகமான சேனல்களுடன் இயக்கி வருகிறது

சலுகை
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் டிவி என தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30 வரை இலவச வீடியோக்களை அறிவித்ததால் தற்போது வோடோபோன் நிறுவனமும் அதேபோன்ற சலுகைய வழங்கியுள்ளது.

போட்டியை சமாளிக்கவும்
தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், இதுபோன்ற கூடுதல் முதலீடுகளை நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது

300 லைவ் சேனல்
இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான வோடோபோன் பிளே நிறுவனம் விளங்கி வருகிறது ஏர்டெல், ஜியோ மற்றும் ஐடியா மூவீஸ் மற்றும் டிவி சேவைகளுக்கு போட்டியாக விளங்கி வருகிறது., ஜியோ டிவி 550 லைவ் டிவி சேனல்களையும், ஏர்டெல் மற்றும் வோடோபோன் 300 லைவ் சேனல்களை பிராந்திய மொழிகளிலும் வழங்கி வருகிறது.

ஒப்பந்தம்
இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வோடோபோன் நிறுவனம் யூப் டிவி, ஏ.எல்.டி பஜாஜ், HOOH ஆகியவைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் வோடோபோன் ரெட் சந்தாதாரர்களுக்கு இரண்டு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நெட்பிளிக்ஸ் இலவசமாக வழங்கி வருகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில்
இந்தியாவில் உள்ள வோடோபோன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த வோடோபோன் பிளே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தோ நேரடியாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

டவுன்லோடு
மேலும் இந்த செயலியை டவுன்லோடு செய்ய குறைந்தபட்சம் ஆன்ராய்ட் 4.1 மற்றும் ஐஒஎஸ்7 வெர்ஷன்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி மூலம் டூயல் வியூ ஸ்க்ரீன், பிக்சர் டு பிக்சர் மோட் உள்பட பல்வேறு வகைகளில் வீடியோக்களை பார்த்து மகிழலாம்.


மொபைல் எண் அல்லது இமெயில்
மேலும் இந்த இலவச வீடியோ சலுகையை வாடிக்கையாளர்கள் பெற சமீபத்திய வோடோபோன் பிளே வெர்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதற்கு உங்களுடைய மொபைல் எண் அல்லது இமெயில் முகவரி இருந்தால் வோடோபோன் அதற்கான லிங்குகளை அனுப்பி வைக்கும். அல்லது PLAY என்று டைப் செய்து 199 என்ற எண்ணுக்கும் அனுப்பலாம்.


Click it and Unblock the Notifications