Home
News

Vodafone-Idea நிறுவனம் மூடப்படுகிறதா? காரணம் என்ன தெரியுமா?

வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால்,நிச்சயம் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கும் என்று நினைக்கிறோம்.இதற்கான காரணம் என்னவென்றால் நீங்கள் பயன்படுத்தி வரும் வோடபோன்-ஐடியா நிறுவனம் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வோடபோன்-ஐடியாவிற்கு வந்த AGR சுமை

வோடபோன்-ஐடியாவிற்கு வந்த AGR சுமை

அதேபோல், வோடபோன்-ஐடியா வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து சாதாரண அழைப்புகள் மற்றும் டேட்டாக்களுக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AGR சுமையின் கீழ் வோடபோன்-ஐடியாவின் நிலை, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

இந்தியாவில் தனது சேவையை நிறுத்தக்கூடும்

இந்தியாவில் தனது சேவையை நிறுத்தக்கூடும்

இது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது கூட உச்ச நீதிமன்றத்திலிருந்து எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வோடபோன்-ஐடியா நிறுவனம் எந்த நேரத்திலும் இந்தியாவில் தனது சேவையை நிறுத்தக்கூடும் நிலை உருவாகியுள்ளது. வோடபோன்-ஐடியா கட்ட வேண்டிய தொகை எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் உங்களுக்கே தலை சுற்றிவிடும்.

எத்தனை கோடி நிலுவை தொகை தெரியுமா?

எத்தனை கோடி நிலுவை தொகை தெரியுமா?

வோடபோன் ஐடியா நிறுவனம் கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை சுமார் 53,000 கோடி ரூபாய் ஆகும். நிலுவையில் உள்ள இந்த தொகைக்கு இதுவரையில் வெறும் 3,500 கோடி ரூபாயை மட்டும் நிலுவைத் தொகையாக வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்தியுள்ளது. இவளவு பெரிய தொகையைச் செலுத்த நிறுவனம் தடுமாறுகிறது என்பதை இது முற்றிலுமாக வெளிப்படுத்தியுள்ளது.

தொலைத்தொடர்புத் துறை பிரச்சினையில் சிக்கியுள்ளது

தொலைத்தொடர்புத் துறை பிரச்சினையில் சிக்கியுள்ளது

இதன் காரணமாக தொலைத்தொடர்புத் துறை மிக பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. வோடபோன் ஐடியா ரூ.53,000 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும். அதன் ஏஜிஆர் நிலுவைத் தொகையில் ஏதுவும் நிவாரணம் பெறாவிட்டால் வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை மூடும் என்று முன்பே தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் மூடப்படலாம் அல்லது கட்டணம் உயர்த்தப்படலாம்

நிறுவனம் மூடப்படலாம் அல்லது கட்டணம் உயர்த்தப்படலாம்

வோடபோன் ஐடியா நிறுவனம் மீண்டும் இந்த நிலுவை தொகையைச் செலுத்தி இந்தியாவில் அதன் சேவையைத் தொடர விரும்பினால், டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட 40 சதவீத கட்டண உயர்வைக் காட்டிலும், இம்முறை சற்று அதிகமாகக் கூட வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வோடபோன் ஐடியா நிறுவனம் நிறுவனம் மீண்டும் தனது மொபைல் கட்டணத்தையும், டேட்டா கட்டணத்தையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
vodafone-or-idea-closing-down-full-agr-details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X