என்னடா இது வோடாபோனுக்கு வந்த சோதனை.!? நசுக்கும் ஏர்டெல்-ஜியோ.!

வோடாபோன் இந்தியா நிறுவனமானது ஏர்டெல் நிறுவனத்தின் பட்ஜெட் நுழைவுநிலை திட்டமொன்றிற்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ளது.

|

இந்திய டெலிகாம் துறையில் நடக்கும் கட்டண யுத்தத்தை- நாற்காலி போட்டு உட்காந்து - வேடிக்கை பார்த்தால் கபடி, கிரிக்கெட் பார்ப்பதை விட மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவ்வளவு அடி-தடி.!

என்னடா இது வோடாபோனுக்கு வந்த சோதனை.!? நசுக்கும் ஏர்டெல்-ஜியோ.!

ஒருபக்கம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவுநிலை திட்டமான ரூ.98/-க்கு போட்டியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் நுழைவுநிலை ரூ.93/-ஐ திருத்த, மறுபக்கம் வோடாபோன் இந்தியா நிறுவனமானது ஏர்டெல் நிறுவனத்தின் பட்ஜெட் நுழைவுநிலை திட்டமொன்றிற்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ளது.

20ஜிபி இலவச டேட்டா

20ஜிபி இலவச டேட்டா

வோடபோன் இந்தியா தனது பட்ஜெட் நுழைவுநிலை திட்டமான ரூ.399/-ஐ ரெட் போஸ்ட்பெயிட்டை அதிகாரப்பூர்வமாக திறுத்தியுள்ளது. இது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399/- ப்ரீபெயிட் திட்டத்திற்கான எதிராகவும், அதே சமயம் அதன் 20ஜிபி இலவச டேட்டா நன்மையை பின்பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் பில்லிங் சுழற்சிக்கு 10ஜிபி

முன்னர் பில்லிங் சுழற்சிக்கு 10ஜிபி

அதாவது வோடபோன் ரூ.399/- ரெட் போஸ்பெயிட் திட்டமானது அதன் பில்லிங் சுழற்சிக்கான 20 ஜிபி இலவச தரவு மற்றும் வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை வழங்கும். இதே திட்டமானது முன்னர் பில்லிங் சுழற்சிக்கு 10ஜிபி அலசிலான டேட்டாவை வழங்கியது மற்றும் வெளியேறும் ரோமிங் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டன.

எங்கெல்லாம் இன்னும் கிடைக்கவில்லை.?

எங்கெல்லாம் இன்னும் கிடைக்கவில்லை.?

இந்த புதிய திருத்தத்துடன், இந்தத் திட்டம் ப்ரீபெய்ட் திட்டங்களைப் போன்றே மாதாந்திர வரம்புகள் ஏதுமின்றி வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை வழங்கும். இந்த திட்டம் ஆந்திரா, ஹிமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பீகார் வட்டாரங்களில் இன்னும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதல் நன்மைகளையும் வழங்கவில்லை.

கூடுதல் நன்மைகளையும் வழங்கவில்லை.

இந்த மாற்றங்கள் தவிர, வோடபோன் வேறு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ரூ.399/- ஏங்கிய ரெட் போஸ்ட்பெயிட் திட்டம் இன்னமும் எஸ்எம்எஸ் பலன்களை வழங்கவில்லை. மேலும், இது இலவச ஐஎஸ்டி நிமிடங்கள், மேக்ஸ்டர் சந்தா, நெட்ஃபிக்ஸ், ரெட் ஷீல்ட், டிவைஸ் செக்யூரிட்டி, வோடாபோன் ஸ்டோர் சேவைகள் மற்றும் கால் சென்டர் சேவைகள் போன்ற பிற கூடுதல் நன்மைகளையும் வழங்கவில்லை.

டேட்டா ரோல்ஓவர்

டேட்டா ரோல்ஓவர்

இருப்பினும் இந்த திட்டம் தரவு மாற்றம் செய்வதற்கான - டேட்டா ரோல்ஓவர் அம்சத்தினை கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் வோடபோன் வலைத்தளத்திற்கு அல்லது பயன்பாட்டிற்கு சென்று ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்.

ஏர்டெல் ரூ.399 திட்டத்துடன் ஒப்பிடும்போது

ஏர்டெல் ரூ.399 திட்டத்துடன் ஒப்பிடும்போது

இந்த புதிய மாற்றம் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரவேற்பு நடவடிக்கையாக இருந்தாலும், ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 திட்டத்துடன் ஒப்பிடும்போது, குறிப்பாக எஸ்எம்எஸ் நன்மைகளுடன் போட்டியிடவில்லை.

இலவச ஏர்டெல் டிவி சேவை

இலவச ஏர்டெல் டிவி சேவை

ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.399 மைபிளான் இன்பினிட்டி போஸ்ட்பெயிட் திட்டத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது, இதவொரு தெளிவான அனுகூலமாகும். இருப்பினும், ஏர்டெல், அமேசான் ப்ரைம் சந்தா போன்ற பிற நன்மைகளை வழங்கவில்லை. ஆனால் இலவச ஏர்டெல் டிவி சேவையை வழங்குகிறது.

ஆனால் வோடாபோனின் வேகம் கவலைக்கிடமாக உள்ளது

ஆனால் வோடாபோனின் வேகம் கவலைக்கிடமாக உள்ளது

டிராய் (Telecom Regulatory Authority of India - Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது

வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது

கடந்த 2017 நவம்பர் மாதத்தில், ஜியோவின் மொபைல் தரவு வேகம் (பதிவிறக்கம்) ஆனது 25.6 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது 2017 ஆண்டு காலண்டரில் அதிகபட்ச வேகமாகும் என்பதையும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. ஜியோவின் முந்தைய டேட்டா வேகப்பதிவுகளுடன் ஒப்பிடும் போது வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது.

2017-ஆம் ஆண்டு

2017-ஆம் ஆண்டு

இதற்கு முந்தைய தரவு வேகங்களை பொறுத்தமட்டில், அதாவது 2017-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 17.4 எம்பிபிஎஸ், 16.5 எம்பிபிஎஸ், 18.5 எம்பிபிஎஸ், 19.1 எம்பிபிஎஸ், 18.8 எம்பிபிஎஸ், 18.7 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 21.9 எம்பிபிஎஸ் மற்றும் 21.8 எம்பிபிஎஸ் என பதிவாகியுள்ளது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

மறுகையில் உள்ள ஜியோவின் பிரதான போட்டியாளரான பார்தி ஏர்டெல் நிறுவனமானது 9.8 எம்பிபிஎஸ் என்கிற அளவிலான வேகத்தை பதிவு செய்துள்ளது. ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் ஏர்டெல் மூலம் பதிவாகியுள்ள மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், ஏர்டெல் ஆனது முறையே 7.5 எம்பிபிஎஸ் மற்றும் 9.3 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்தது.

வோடபோன் இந்தியா

வோடபோன் இந்தியா

வோடபோன் இந்தியா நிறுவனமானதும் ஏர்டெல் நிறுவனத்தை பின்பற்றியது. நவம்பர் மாதம் அதன் செயல்திறனானது 10 எம்பிபிஎஸ் என்கிற புள்ளியை தொட்டது. அதற்கு முன்னர் அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 8.7எம்பிபிஎஸ் மற்றும் 9.9எம்பிபிஎஸ் என்கிற வேகத்தை பதிவு செய்தது.

ஐடியா செல்லுலார்

ஐடியா செல்லுலார்

இறுதியாக, ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் செயல்திறன் ஏமாற்றமளிக்கிறது என்றே கூறலாம். அதன் மொபைல் தரவு வேகம் ஏப்ரல் முதல் தொடர்ந்து சீர்குலைந்த வண்ணம் உள்ளது. இது நவம்பர் மாதத்தில் 7 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டின் மிக குறைவான வேகமாகும்.

பின்னோக்கி பயணிப்பதை அறிய முடிகிறது

பின்னோக்கி பயணிப்பதை அறிய முடிகிறது

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐடியா நிறுவனமானது 13.7எம்பிபிஎஸ், 11.7எம்பிபிஎஸ், 9.5 எம்பிபிஎஸ், 8.9 எம்பிபிஎஸ், 8.8 எம்பிபிஎஸ், 8.6 எம்பிபிஎஸ் மற்றும் 8.1 எம்பிபிஎஸ் என்று பதிவாகியது. ஆக ஐடியா செல்லுலார் நிறுவனமானது பின்னோக்கி பயணிப்பதை அறிய முடிகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Officially Updates RED Rs 399 Postpaid Plan With Free Outgoing Roaming Calls and 20GB Data. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X