3ஜிபி வோடபோன் 3ஜி/4ஜி வரம்பற்ற குரல் அழைப்புகள் ரூ.297/-க்கு.!
வோடபோன் தனது 'ஆல் இந்த ஒன்' பேக் அறிமுகத்திற்கு பிறகு வோடஃபோன் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு அற்புதமான சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான நடவடிக்கையாக ஏர்டெல் நிறுவனம் தனது வரம்பற்ற குரல் அழைப்புகளை தன் பயனர்களுக்கு வழங்கியதை தொடர்ந்து இப்பொழுது வோடபோன் இந்தியா அதே திசையை நோக்கி நகர்கிறது அதாவது வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.
பல நுழைவு நிலை கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்திய பின், வோடபோன் இப்போது எந்தவொரு நெட்வொர்க் உடனான உள்ளூர் எண் அழைப்பில் வரம்பற்ற குரல் அளிக்கத் துவங்கியுள்ளது. உடன் சேர்த்து, இந்த தொலை தொடர்பு ஆப்ரேட்டர் வெறும் ரூ.297/-க்கு அற்புதமான வாய்ப்பை அதாவது 3ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு வழங்கும் திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

3ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டா
வோடாபோனின் இந்த புத்தம் புதிய சலுகையில் கீழ் நீங்கள் 3ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டா பெறுவீர்கள் உடன் குறிப்பாக மும்பை - மும்பை, மும்பையில் இருந்து மஹாராஷ்டிரா கோவா போன்ற எல்லைகளிக்குள்ளான இலவச லோக்கல் கால்கள் கிடைக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு
வோடபோன் நிறுவனம் வழங்கும் இந்த புதிய குரல் அழைப்பு திட்டம் ஆனது ஒரு சிலருக்கு மட்டுமே முறையாக கிடைக்கும் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இலவச உள்வரும் அழைப்பு
இந்த சலுகையுடன் இணைந்து, வோடபோன் இந்தியா தனது ரோமிங் பேக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தேசிய ரோமிங்கில் இலவச உள்வரும் அழைப்புகளை அறிவித்துள்ளது. இது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான ஆல் இந்த ஒன் பேக்கை தொடர்ந்து வெளியான ஒரு சலுகையாகும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரத்தியேகமாக மட்டுமே
வோடாபோனின் ஆல் இந்த ஒன் பேக் ஆனது லோக்கல் டால்க் டைம், எஸ்டிடி, உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் நிமிடங்கள் (சிங்கிள் ரீசார்ஜ்) பிரத்தியேகமாக தில்லி மற்றும் என்சிஆர் வட்டங்களுக்கு மட்டுமே வழங்குகிறது.

ஏர்டெல்
வோடபோன் மும்பை மற்றும் மகாராஷ்டிரா வட்டங்களில் மட்டுமே அதன் வரம்பற்ற குரல் அழைப்பு வாய்ப்பை முன்னெடுத்துள்ளது, எனினும், ஏர்டெல் அதே வாய்ப்பை தில்லி, கொல்கத்தா மற்றும் மும்பை முழுவதும் மிகவும் பரந்த அளவிலான பயனர்களுக்கு வழங்குகிறது. எனினும் ஏர்டெல் வழங்கும் இந்த வாய்ப்பை பயனர்கள் இனி பெற முடியாது.

மேலும் படிக்க
ரிலையன்ஸ் ஜியோவிற்கு 'போர்ட்' செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவைகள்.!


Click it and Unblock the Notifications