ஜியோ ஆபர் எதிரோலி : ரூ.244-க்கு வோடபோன் வழங்கும் அதிரடி ஆபர்.!
ரூ.244-க்கு ரீசார்ஜ் சலுகை பொதுவாக முதல் முறை ரீசார்ஜ் செய்வோர்க்கு மட்டுமே கிடைக்கும், ஏற்க்கேனவே வோடபோன் சேவையை பயன்படுத்துவோர்க்கு இந்த சலுகை கிடைக்காது என வோடோபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வோடபோன் நிறுவனம் தற்போது இந்தியாவில் அதிரடி ஆபர் அறிவித்துள்ளது, ஜியோ நிறுவனத்திறக்கு போட்டியாக வோடபோன் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடோபோன் நிறுவனம் தற்போது ரூ.244-க்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் 70நாட்கள் வரை டேட்டாவை பயன்படுத்தும் வண்ணம் உள்ளது, மேலும் ஜியோ இதை தொடர்ந்து பல்வேறு ஆபர்கள் அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

கேஷ்பேக ஆபர்;
மை வோடபோன் ஆப் கொண்டு ரூ.244 மற்றும் ரூ.346 திட்டங்களை ரீசார்ஜ் செய்வோருக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது என வோடோபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.244-க்கு ரீசார்ஜ்:
தற்போது அறிவித்துள்ள இந்த ரூ.244-க்கு ரீசார்ஜ் பொறுத்தவரை 70 நாட்கள் வேலிடிட்டி எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் தினசரி 1ஜிபி 4ஜி/3ஜி டேட்டாவை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் இந்த திட்டத்தில் சேரும்.

சலுகை:
ரூ.244-க்கு ரீசார்ஜ் சலுகை பொதுவாக முதல் முறை ரீசார்ஜ் செய்வோர்க்கு மட்டுமே கிடைக்கும், ஏற்க்கேனவே வோடபோன் சேவையை பயன்படுத்துவோர்க்கு இந்த சலுகை கிடைக்காது என வோடோபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

35 நாட்கள்:
இந்த டேட்டா ஆபர் 70நாட்கள் பயன்படும் வகையில் உள்ளது, அதன்பின் இந்த சலுகை அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும்போது 35நாட்கள் வேலிடிட்டியாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.346-க்கு ரீசார்ஜ்:
தற்சமயம் ரூ.346-க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாட்கள் டேட்டா பயன்படும் விதம் உள்ளது, மேலும் தினசரி 1ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதன்பின் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் இந்த திட்டத்துடன் வழங்கப்படுகிறது.

ஜியோ :
ஜியோ நிறுவனம் இப்போது பல்வேறு அதிரடி ஆபர்களை அறிவித்துள்ளது, மேலும் 4ஜி பீச்சர் போன்களை வெளியிட்டு சந்தையில் முதல் இடத்தில் உள்ளது, அதைதொடர்ந்து பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் அதிரடி ஆபர்களை அறிவித்த வண்ணம் உள்ளது.

ஏர்டெல் & ஐடியா :
ஏர்டெல்நிறுவனம் ரூ.244-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1 ஜிபி டேட்டா பெறமுடியும் எனத் தெரிவித்துள்ளது, அதைதொடர்ந்து ஐடியா ரூ.297 விலையில் டேட்டா ஆபரை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications