அன்லிமிடெட் 3ஜி/4ஜி டேட்டா வழங்கும் வோடபோன் சூப்பர்நைட் பேக்.!

Written By:

கடந்த ஏப்ரல் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 112.5 மில்லியனைத் தொட்டவுடன் இதர டெலிகாம் ஆபரேட்டர்கள் புதிய போட்டிகளுடன், புதிய உக்திகளுடன் களமிறங்கிய வண்ணம் உள்ளன.

சமீபத்தில் இந்திய அரசாங்கம் மூலம் இயக்கப்படும் பிஎஸ்என்எல் அதன் ரூ.444/-க்கு நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான 3ஜி டேட்டா என 90 நாட்களுக்கு மொத்தம் 360ஜிபி டேட்டாவை வழங்கி மாபெரும் போட்டியை துவங்கி வைத்தது. இப்போது, வோடபோன் இந்தியா அதன் அதிரடிகளை நிகழ்த்த தொடங்கியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தொப்பி இல்லாமல்

தொப்பி இல்லாமல்

வோடபோன் தற்போது அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒரு ரீசார்ஜ் பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இது தரவில் எந்த எல்லை தொப்பியும் இல்லாமல் இணையத்தை அணுக அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் படி ஒரு மணி நேரத்திற்கு ரூ.6/-க்கும் குறைவான விலையில் 3ஜி/4ஜி டேட்டா பெறலாம்.

ரீசார்ஜ் பேக் ரூ.29/-

ரீசார்ஜ் பேக் ரூ.29/-

இந்த புதிய வோடபோன் சூப்பர்நைட் ரீசார்ஜ் பேக் ரூ.29/- மதிப்பு கொண்டதாகும். இதன்கீழ் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 3ஜி / 4ஜி (வட்டம் / சாதனத்தை பொறுத்து) பெறலாம்.

ரூ.6/-க்கும் குறைவான விலை

ரூ.6/-க்கும் குறைவான விலை

இந்த இணைய அணுகலை நள்ளிரவு 1 முதல் அதிகாலை 6 மணி வரை நிகழ்த்திக் கொள்ளலாம். அதாவது கிட்டத்தட்ட மணிக்கு ரூ.6/-க்கும் குறைவான விலை நிர்ணயத்தில் வரம்பற்ற இணைய அணுகல் கிடைக்கும்.

தினமும் எப்போது வேண்டுமானாலும்

தினமும் எப்போது வேண்டுமானாலும்

இந்த புதிய வோடபோன் சூப்பர்நைட் ரீசார்ஜ் பேக் விலை வட்டதிதிக்கு ஏற்றபடி வேறுபடலாம் என்று வோடபோன் கூறுகிறது. இந்த வோடபோன் 29 ரீசார்ஜ் பேக்கை தினமும் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அதை நள்ளிரவு 1 மணிக்கு மட்டுமே கிக் செய்ய முடியும்.

யூஎஸ்எஸ்டி குறியீடு

யூஎஸ்எஸ்டி குறியீடு

இந்த சலுகையை டிஜிட்டல் சேனல்கள், ஆஃப்லைன் கடைகள் மூலம் வாங்கலாம் மற்றும் *444*4# என்ற யூஎஸ்எஸ்டி குறியீடு வழியாகவும் வாங்கலாம். "வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு இரவையும் சூப்பர்நைட் ஆக மாற்றுவதுதான் வோடபோன் வழங்கும் வரம்பற்ற சூப்பர்நெட்டை மணிக்கு வெறும் ரூ.6/-க்கு அனுபவிக்க முடியும்" என்று நிறுவனம் கூறியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Vodafone Offers Unlimited Internet Access at Rs. 6 per Hour With New SuperNight Pack. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot