அறிமுகம் : அன்லிமிடெட் வாய்ஸ் & பல இலவச நன்மைகளுடன் வோடபோன் ரூ.499/- திட்டம்.!

|

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் முயற்சியில், வோடபோன் செவ்வாய்க்கிழமை (இன்று) அதன் புதிய போஸ்ட்பெயிட் திட்டமான ரூ.499/- ரீசார்ஜை அறிவித்துள்ளது.

அறிமுகம் : அன்லிமிடெட் வாய்ஸ் & பல இலவச நன்மைகளுடன் வோடபோன் ரூ.499.!

இந்த திட்டத்தின் கீழ், வரம்பற்ற அழைப்புகள் (ரோமிங் உட்பட), பயன்படுத்தப்படாத தரவு பரிமாற்றம், சாதன காப்பீடு, மூவி ஆப்ஸ் மற்றும் பல்வேறு நலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். ஒருமாத காலம் செல்லுபடியாகும் வோடபோனின் இந்த புதிய சலுகை மாதத்திற்கு ரூ.499/- செலவாகும்.

கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.!

கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.!

ரெட் டிராவலர் திட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள வோடபோன் போஸ்ட்பெயிட் திட்டங்களானது இலவச தேசிய ரோமிங் நன்மை மற்றும் இந்தியாவில் எங்கிருந்தும், இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் அழைப்பதற்கு நுகர்வோர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று ஒரு அறிக்கையில் வோடபோன் தெரிவித்துள்ளது.

200ஜிபி பயன்படுத்தப்படாத தரவுகளை ரோல்ஓவர்.!

200ஜிபி பயன்படுத்தப்படாத தரவுகளை ரோல்ஓவர்.!

செப்டம்பர் மாதம் வரையிலாக, சுமார் 20.7 கோடி மொபைல் சந்தாதாரர்களை கொண்டு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக வோடபோன் திகழ்கிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், வோடபோன் வாடிக்கையாளர்கள் அடுத்த பில்லிங் சுழற்சிக்கு 200ஜிபி அளவிலான பயன்படுத்தப்படாத தரவுகளை ரோல்ஓவர் செய்ய முடியும்.

சாதன பாதுகாப்பு திட்டம், 100 எஸ்எம்எஸ் மற்றும் பல.!

சாதன பாதுகாப்பு திட்டம், 100 எஸ்எம்எஸ் மற்றும் பல.!

தவிர, அனைத்து வோடபோன் ரெட் திட்டங்களுமே மொபைல் சாதன பாதுகாப்பு திட்டம், 100 எஸ்எம்எஸ், திரைப்படங்கள் மற்றும் நேரடி தொலைக்காட்சிக்கான மாக்ஸ்ட்டர் மற்றும் வோடபோன் பிளே பயன்பாட்டிற்கான அணுகல் ஆகிய நன்மைகளை வழங்கும்.

ஐஎஸ்டி அழைப்பு நன்மை.!

ஐஎஸ்டி அழைப்பு நன்மை.!

ரூ.999 அல்லது அதற்கும் மேலான விலை கொண்ட தொகுப்புகள் நெட்ஃபிக்ஸ் சந்தாவை வழங்குவதோடு, ரூ.1,299/-ல் இருந்து தொடங்கும் அனைத்து மாதாந்திர திட்டங்களும் அமெரிக்க, கனடா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுக்கான ஐஎஸ்டி அழைப்பு நன்மைகளை வழங்கும்.

எங்கெல்ல்லாம் கிடைக்காது.?

எங்கெல்ல்லாம் கிடைக்காது.?

அதிகமான தரவு நுகர்வு கொண்ட பயனாளர்களை இலக்காக கொண்டுள்ள புதிய திட்டம் என்பதால் ஆந்திரா, மத்திய பிரதேசம், பீகார், ஜம்மு, காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய திட்டங்கள் கிடைக்காது.

மொத்தம் 300ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

மொத்தம் 300ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

சமீபத்தில் ஏர்டெல் அறிவித்துள்ள புதிய திட்டமொன்றின் கீழ் மொத்தம் 300ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டம் 360 நாட்களுக்கு செல்லுபடியாகும். தரவைப் பயன்படுத்துவதில் தினசரி வரம்பு இல்லை, எனவே ஒரு நாளைக்கு 360ஜிபி தரவையும் கூட பயன்படுத்திக்கொள்ளலாம் .இந்த ஏர்டெல் திட்டம் ரூ.3,999 ஆகும்.!

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399/- திட்டம்.!

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399/- திட்டம்.!

மறுபுறம், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஆனது ரூ.399/- திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற இலவச அழைப்பு நன்மைகளை 70 நாட்களுக்கு வழங்குகிறது. 1ஜிபி என்ற தினசரி வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Vodafone offers unlimited free calls in this new plan priced at Rs 499; offers freebies too. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X