4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வோடபோனின் அதிரடி கேஷ்பேக் சலுகை.!
வோடபோன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் சலுகை பெற தொடர்ந்து 24 மாதங்களுக்கு ரூ.198 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் நிறுவனம் மற்றும் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி சாம்சங் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1500-வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் அறிவித்துள்ள இந்த சலுகை பொறுத்தவரை தேர்வுசெய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்கும் வோடபோனின் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

வோடபோன்:
இந்த கேஷ்பேக் சலுகை பொறுத்தவரை வோடபோன் சேவையைப் பயன்படுத்தும் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பிரீபெய்ட்:
வோடபோன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் சலுகை பெற தொடர்ந்து 24 மாதங்களுக்கு ரூ.198 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் கால் அழைப்புகள் மற்றும் 1ஜிபி டேட்டா வழங்கப்படும்.

போஸ்ட்பெய்ட் :
வோடபோன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் சலுகை பெற வோடபோன் ரெட் திட்டங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும், அதன்படி முதல் 12 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.600 கேஷ்பேக் வழங்கப்படும். அதன்பின்பு அடுத்த 12 மதாங்கள் நிறைவுற்றதும் ரூ.900 கேஷ்பேக் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் வாலெட் :
வோடபோன் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முதல் 24 மாதங்களுக்கு மொபைல் வாலெட் சேவையை பயன்படுத்த வேண்டும், வோடபோன் கேஷ்பேக் சலுகையை அந்நிறுவனத்தின் எம்-பேசா வாலெட்டில் சேர்க்கப்படும்.

சாம்சங் ஸ்மார்ட்போன்கள்:
வோடபோன் இப்போது அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகையில் சாம்சங் கேலக்ஸி ஜெ2 ப்ரோ ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள்
ரூ.6,990-விலையில் வாங்க முடியும். அதன்பின்பு கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை ரூ.8,990-க்கு வாங்க முடியும், மேலும் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.15,400-க்கு வாங்க முடியும்.

கேஷ்பேக்:
இதற்கு முன்பு வோடபோன் நிறுவனம் ஐடெல் மொபைல் மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு
கேஷ்பேக் சலுகையை வழங்கியது.


Click it and Unblock the Notifications