வெள்ளம் பாதித்த பகுதிகளில் வோடோபோனின் இலவச அழைப்பு சலுகை

By Siva
|

வட இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடோபோன் வெள்ளம் பாதிக்கப்பட்ட ஒருசில குறிப்பிட்ட பகுதிகளில் 50 நிமிடங்கள் இலவச அழைப்புகள் சலுகையை வழங்கியுள்ளது

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வோடோபோனின் இலவச அழைப்பு சலுகை

இதுகுறித்து வோடோபோன் இந்திய பிசினஸ் தலைவர் நிதி லாரியா அவர்கள் கூறியபோது, 'வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெருவெள்ளம் காரணமாக பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த பகுதி மக்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் 50 நிமிடங்கள் இலவச அழைப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளோம்

இந்த வசதி தற்போது வெள்ளம் பாதித்த பகுதியான காம்ரூப், கரீம்கனி, மற்றும் போங்காய்காவோன் ஆகிய அஸ்ஸாம் மாநில பகுதிகளிலும், மணிப்பூரில் உள்ள உக்ரூல், பிஷ்னுபூர் ஆகிய பகுதிகளும், மற்றும் வடக்கு திரிபுரா பகுதிகளிலும் இந்த இலவச சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை இந்த பகுதி சீரடையும் வரை சுமார் 15000 பேர்களுக்கு உதவும் வகையில் தொடரப்படும் என்று நிதிலாரியா மேலும் கூறினார்

மேலும் இந்த இலவச அழைப்பு வசதி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கும் மட்டும் என்பது மட்டுமின்றி லோக்கல் கால்கள் மட்டுமே இலவசமாக சேவை வழங்கப்படும்

மேலும் வோடோபோன் நிறுவனம் அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்புடன் இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.எம்.எஸ் மூலம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளை கவனமாக கண்காணித்து தொற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பாதித்த இடங்களை கண்டறிந்து சுகாதார துறைக்கு தகவல் அளிக்கின்றது

கடந்த 2008ஆம் ஆண்டு அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வோடோபோன் தன்னுடைய தொலைத்தொடர்பு சேவையை தொடங்கியது. இந்த பகுதியில் இருக்கும் வோடோபோன் அலுவலகங்களில் பெரும்பாலும் உள்ளூர்காரர்களுக்கே வேலைவாய்ப்பை இந்த நிறுவனம் அளித்துள்ளது.

சுமார் 70000 உள்ளூர் மக்களை பணியில் அமர்த்தி இந்த பகுதியில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் உதவி செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏழு மாநிலங்களிலும் வோடோபோன் மக்களின் நன்மதிப்பை பெற்றது இதற்காகத்தான்

2015-16 நிதியாண்டில், உள்ளூர் திறமை மொத்த பணியாளர்களில் 88 சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டது; இந்த எண்ணிக்கை வோடபோன் அசாம் மற்றும் வடகிழக்கு 2016-17 நிதியாண்டில் 90 சதவிகிதம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Vodafone has said the free talk-time offer depends on cell site data of flood affected regions and applies only to local calls.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X