முன்பு 1ஜிபி என்றால் இப்போது 4ஜிபி : இது வோடபோன் 4எக்ஸ் அதிரடி.!
வோடபோன் அதன் 4ஜி சேவைகளை கொண்ட அனைத்து வட்டாரங்களில் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு நான்கு முறை அதிக அளவிலான 4ஜி தரவு நன்மைகள் அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது.
ஒருபக்கம் தன்னால் என்னவெல்லாம் கொடுக்க முயடியுமோ அனைத்தையும் கொடுத்து முடித்துவிட்டு அமைதியாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மறுபக்கம் பிரபல இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு ஏதாவது சலுகை அளித்துக்கொண்டேஇருக்கும் முனைப்பில் உள்ளது. இல்லையெனில் ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைகளை மற்றும் இலவச புயலில் சிக்கி பல வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்பதை ஏர்டெல், ஏர்செல், வோடபோன் உட்பட அனைத்து நிறுவனங்களுமே அறிவர்.
அதன் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை (நேற்று ) வோடபோன் அதன் 4ஜி சேவைகளை கொண்ட அனைத்து வட்டாரங்களில் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு நான்கு முறை அதிக அளவிலான 4ஜி தரவு நன்மைகள் அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது. அப்படியாக 4ஜிபி மற்றும் 22ஜிபி டேட்டா என்ன விலை தெரியுமா.? சொன்னால் நம்ப மாட்டீர்கள்.!

முன்பு 1ஜிபி என்றால் இப்போது 4ஜிபி
இப்போது ரூ.150 தரவு பேக் ஆனது ஒரு மாதம் கால 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ரூ.250/- பேக் ஆனது 4ஜிபி டேட்டாவையும் மற்றும் ரூ.1,500/- தரவு பேக் ஆனது ஒரு மாதம் காலம் செல்லுப்படியாகும் 35ஜிபி அளவிலான டேட்டாவை கொடுக்கும். இந்த புதிய நடவடிக்கையானது புதிய நுழைவான ரிலையன்ஸ் ஜியோவிற்குஎதிரான பல எதிர்வினைகளில் ஒன்று என்பது வெளிப்படை.

வட்டத்திற்கு வட்டம் மாறுபடும்
வோடபோன் நிறுவனம் தனது புதிய தரவு பெட்டிகளின் விலையானது வட்டத்திற்கு வட்டம் மாறுபடும் என்றும் குறிப்பிடுகிறது. வோடபோன் நிறுவனத்தின் இந்த 4 எக்ஸ் தரவு சலுகைகளை டிஜிட்டல் சேனல்கள் அதே போல் அனைத்து சில்லறை கடை புள்ளிகள் வழியாகவும் வாங்க முடியும்.

4எக்ஸ் டேட்டா
முன்பு 1ஜிபி மற்றும் 10ஜிபி அளவிலான 4ஜி தரவு வாங்கிய வாடிக்கையாளர்கள் இப்போது அதே விலையில் 4ஜிபி மற்றும் 22ஜிபி தரவு பொதிகள் வாங்க முடியும். ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் வோடாபோனின் பழைய தரவு பொதிகள் மற்றும் புதிய தரவு பொதிகளுக்கு இடையிலேயான விலை வித்தியாசத்தை அறிய தான் இந்த சலுகைகளுக்கு 4எக்ஸ் டேட்டா பேக்ஸ் என்று பெயரிட்டுள்ளது.

முழு பட்டியல்
வோடபோன் வழங்கும் புதிய 4ஜி தரவு பொதிகளின் முழு பட்டியல் : 1ஜிபி தரவு பேக் இப்போது ரூ.150/-க்கும், 4ஜிபி தரவு பேக் இப்போது ரூ.250/-க்கும், 6ஜிபி தரவு பேக் இப்போது ரூ.350/-க்கும், 9ஜிபி தரவு பேக் இப்போது ரூ.450/-க்கும், 13ஜிபி தரவு பேக் இப்போது ரூ.650/-க்கும், 22ஜிபி தரவு பேக் இப்போது ரூ.999/-க்கும், 35ஜிபி தரவு பேக் இப்போது ரூ.1,500/-க்கும் கிடைக்கிறது.

சூப்பர் ரிச் தரவு பொதிகள்
"எங்கள் வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான ஆன்லைன் உள்ளடக்கம் மற்றும் வீடியோக்களை நுகர்பவர்களாய் உள்ளன. இந்த 'சூப்பர் ரிச்' தரவு பொதிகள் மூலம்17 வட்டங்களிலும் 4ஜி வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் வேகமான வோடபோன் சூப்பர்நெட் 4ஜி மொபைல் இண்டர்நெட்டை அனுபவிக்க முடியும். மற்றும் வரையறுக்கப்பட்ட இண்டர்நெட் பயனர்களை இந்த திட்டம் ஊக்குவிக்கும் மற்றும் அதே செலவு ஆன்லைனில் தங்களுக்கு பிடித்த உள்ளடக்கத்தை மேலும் நான்கு முறை அதிகமாக அணுக வழிவகுக்கும்" என்று வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கியில் ஒரு அக்கவுண்ட்டை திறப்பது எப்படி.?


Click it and Unblock the Notifications