வோடபோன் ரெட்: ரூ.399/-க்கு 10ஜிபி கூடுதல் டேட்டா + இதர நன்மைகள்.!

|

வோடபோன் இந்தியா நிறுவனம் அதன் ரெட் டூகெதர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது, வோடபோன் ரெட் பேஸிக் திட்டங்களை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவிகிதம் வரையிலான க்ரூப் கட்டணத்தை சேமிக்கவும் மற்றும் 20ஜிபி வரையிலான கூடுதல் தரவை பெறவும் அனுமதிக்கிறது.

வோடபோன் ரெட்: ரூ.399/-க்கு 10ஜிபி கூடுதல் டேட்டா + இதர நன்மைகள்.!

கூடுதலாக, ரெட் திட்டங்கைக்கு நுகர்வோர்கல் தங்கள் குழுவின் மொத்த கட்டணத்தொகையையும் ஒரே கட்டணமாக செலுத்தும் வசதியும் ரெட் டூகெதர் திட்டத்தின் கீழ் கிடைக்கும். இந்த ரெட் டூகெதர் திட்டமானது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே என்ற வாம்பை கொண்டிருக்காது. இந்த திட்டத்தின் கீழ் நண்பர்கள் அல்லது சாதனங்களை கூட இணைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

10ஜிபி அளவிலான தரவு மற்றும் 200ஜிபி வரை ரோல்ஓவர்

10ஜிபி அளவிலான தரவு மற்றும் 200ஜிபி வரை ரோல்ஓவர்

இந்தத் திட்டம் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி, தேசிய ரோமிங் இலவச உள்வரும் அழைப்பு நன்மைகளுடன் 10ஜிபி அளவிலான தரவு மற்றும் மீதமான தரவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு எடுத்துச்செல்லும் நன்மை (அதிகபட்சம் 200ஜிபி பயன்படுத்தாத தரவு) ஆகியவைகளை வழங்குகிறது.

ரூ.399-ல் இருந்து துவங்கும் ரெட் போஸ்ட்பெயிட்

ரூ.399-ல் இருந்து துவங்கும் ரெட் போஸ்ட்பெயிட்

வோடபோன் வழங்கும் ரூ.399-ல் இருந்து துவங்கும் எந்தவொரு புதிய ரெட் போஸ்ட்பெயிட் திட்டத்தை அணுகும் நுகர்வோர்களுக்கும் இந்த பயன்ககள் கிடைக்கும். உடன் ஒவ்வொரு ரெட் போஸ்ட்பெயிட் திட்டத்திற்கும் ஏற்றவண்ணம் ஒவ்வொரு நுகர்வோரும் ரெட் டூகெதர் திட்டத்தின் கீழ் அருமையான நன்மைகளை அனுபவிக்கலாம்.

உத்தரவாதமிக்க நன்மைகள்

உத்தரவாதமிக்க நன்மைகள்

ரெட் டூகெதர் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வோடபோன் ரெட் பட்ஜெட் திட்டங்களின் உத்தரவாதமிக்க நன்மைகளை பொறுத்தமட்டில், இந்தியாவில் எங்கிருந்தும் இலவச தேசிய ரோமிங் மூலம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நிகழ்த்தும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

நெட்பிளிக்ஸ், வோடபோன் பிளே மற்றும் மாக்ஸ்டர்

நெட்பிளிக்ஸ், வோடபோன் பிளே மற்றும் மாக்ஸ்டர்

ஒரு பில்லிங் சுழற்சியின் கீழ் எந்தவொரு தரவையும் நுகர்வோர்கள் வீணாக்கமுடியாது. வோடபோன் வழங்கும் ரோல்ஓவர் மூலம் சுமார் 200ஜிபி அளவிலான பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு கொண்டுசெல்லலாம். உடன் இந்த திட்டத்தின் நுகர்வோர்கள், நெட்பிளிக்ஸ், வோடபோன் பிளே மற்றும் மாக்ஸ்டர் ஆகிய பொழுதுபோக்கு நன்மைகளுக்கான 12 மாத காலம் வரை அனுபவிப்பார்கள்.

ரெட் ஷீல்ட்

ரெட் ஷீல்ட்

எல்லாவற்றிக்கும் மேலாக இந்த திட்டத்தை அணுகும் நுகர்வோர்களின் ஸ்மார்ட்போன்களுக்கு ரெட் ஷீல்ட் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன. இது கைபேசியை பாதுகாக்கும் ஒரு அம்சமாகவும். இது திருட்டு மற்றும் சேதத்திலிருந்து கைபேசிகளைப் பாதுகாக்கிறது. வோடாபோனின் இந்த புதிய திட்டங்கள் தற்போது ஆந்திரா, மத்தியப் பிரதேசம், பீகார், ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய வட்டாரங்களில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone offers 10GB Data at Rs 399 on RED Basic Plan. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X