10 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் தீபாவளி திட்டம்.! விலை எவ்வளவு தெரியுமா?
இந்த அட்டகாசமான வோடாபோன் ப்ரீபெய்ட் திட்டத்தை வோடபோன் நிறுவனம், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக அறிமுகம் செய்துள்ளது.
வோடபோன் நிறுவனம், அடுத்த புது ப்ரீபெய்ட் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 4ஜி தரவரிசையில் 10 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் vs வோடபோன் vs ஜியோ
இந்த அட்டகாசமான வோடாபோன் ப்ரீபெய்ட் திட்டத்தை வோடபோன் நிறுவனம், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக அறிமுகம் செய்துள்ளது.

விலை ரூ.597
இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.597 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வோடபோன் பயனர்களுக்கு எனப் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன்படி பியூச்சர் போன் பயனர்களுக்கு 168 நாட்கள் வேலிடிட்டியுடனும் மற்றும் ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு 112 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

10 ஜிபி - 4ஜி டேட்டா
இந்த புதிய வோடபோன் ப்ரீபெய்ட் திட்டம் 4ஜி தரவரிசை சேவை உள்ள அனைத்து இந்தியா நகரத்திற்கும் பொருந்துமென்று வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய ரூ.597 திட்டம் ஏர்டெல் வழங்கவும் ரூ.597 திட்டத்திற்குப் போட்டியாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய அறிமுக திட்டம்
வோடபோன் நிறுவனம், இந்த மாதத்தின் துவக்கத்தில் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் ப்ரீபெய்ட் ரூ.99 மற்றும் ரூ.109 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவையுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications